ஜூன் 1 க்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -செங்கோட்டையன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜூன் 1 க்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -செங்கோட்டையன்

🍏 ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும்

🍊 -2017 தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் .

🌻ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்  ஏப்ரல் 3-வது வாரத்தில்  வழங்க ஏற்பாடு. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

🌻விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

🌻ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன.

🌻 பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.

🌻 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பட்ட தாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (தாள்-2) 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் (மொத்தம் 8 லட்சம் பேர்) விண்ணப்பித்துள்ளனர். http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

🌻ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென் னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.

🌻 தற் போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

🌻இப்பணி முடிவடைந்ததும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
🌻விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌻வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அதாவது ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

🌻 எனவே, தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்பு நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

🌻 ஆனால், புதிதாக நடத்தப்பட உள்ள தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

🌻 இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்களையும் அரசு கேட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால் அதற்கேற்ப கணிசமான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here