*
அரசிடம் அனுமதி பெறாத தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கவேண்டாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கல்விக்கட்டண கொள்ளை அதிகரித்துவருகிறது.
இதைக் கண்டித்து பெற்றோர்களும் பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
மேலும், அரசு அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டேன்.
அதில் தமிழக அரசிடமிருந்து முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்ற
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி களான அரியலூர் நகரில் உள்ள
விஷ்ணு விகாஸ் பள்ளி,
மேயா மண்டேஸ்வரி பள்ளி,
ஸ்ரீரித்திகா நிகேதன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கடுகூர்,
சரஸ்வதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
ஈரோ கிட்ஸ், பத்மஸ்ரீ பிளே ஸ்கூல்,
ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஜெய்ஹிந்த் மழலையர் பள்ளி,
உட்கோட்டையில் உள்ள மைனா மழலையர் பள்ளி,
சுமதி மழலையர் பள்ளி,
கண்ணன் மழலையர் பள்ளி,
சௌபாக்யா சி.பி.எஸ்.இ பள்ளி,
தா.பழூர் ஒன்றியத்தில் கிரீன் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
ஆகியவை செயல்படுகின்றன. எனவே, இப்பள்ளிகளில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம்'' என அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக