ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை ஒரு நாள் கலெக்டராக ஆக்கி கவுரவிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது
ராஜஸ்தானில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இதில், ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா குமாரி மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இவரது சாதனையை கவுரவிப்பதற்காக கலெக்டர் தினேஷ்குமார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து அலுவலகம் வந்த மாணவி வந்தனாவை தனது இருக்கையில் உட்கார வைத்து கலெக்டர் தினேஷ் குமார் கவுரவித்தார்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், ''முதல் மதிப்பெண் பெற்ற வந்தனா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விருப்பம் என்று தெரிவித்திருந்தார்.
அவரை ஊக்குவிக்கும் விதமாக ஒரு நாள் கலெக்டராக என் இருக்கையில் உட்கார வைத்தேன். சில பணிகளையும் அவர் மேற்பார்வையிட செய்தேன்''என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக