பிளஸ் 2 மதிப்பெண் குறைவு சரிவர திருத்தப்படாததால் அதிர்ச்சி* திருச்சியில், பிளஸ் 2 தேர்வு தாளை சரிவர திருத்தாததால், மதிப்பெண் குறைந்து விட்டதாக, - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு சரிவர திருத்தப்படாததால் அதிர்ச்சி* திருச்சியில், பிளஸ் 2 தேர்வு தாளை சரிவர திருத்தாததால், மதிப்பெண் குறைந்து விட்டதாக,

திருச்சியில், பிளஸ் 2 தேர்வு தாளை சரிவர திருத்தாததால், மதிப்பெண் குறைந்து விட்டதாக, மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, சோனாபுரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. திருச்சி, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தனியார் பள்ளியில், வணிகவியல் பாடப்பிரிவு எடுத்து படித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய இவருக்கு, கணக்கு பதிவியல் பாடத்தில், 124 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால், அதிர்ச்சிஅடைந்தார்.

அதிக மதிப்பெண் எதிர்பார்த்த திவ்யா, மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள்களை கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.

அப்போது, விடைத்தாளில், ஆறு பக்கங்கள் திருத்தாமல் விடுபட்டிருப்பதும், 12 மதிப்பெண் வினாவுக்கு சரியான விடை எழுதியிருந்த போதிலும், 6 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

விடைத்தாள் முறையாக திருத்தப்படாமல், மதிப்பெண் குறைந்து, உயர் படிப்புக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி, மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வர்களுக்கு, மறு மதிப்பீட்டுக்கான அவகாசம், 6ம் தேதியுடன் முடிந்து விட்டதால், சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாணவியின் விடைத்தாளில், தொடர்ச்சியாக, ஆறு பக்கங்கள் திருத்தப்படாமல் உள்ளது.'மறு மதிப்பீட்டுக்கான கால அவகாசம் முடிந்து விட்டதால், இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்குமாறு கூறி உள்ளோம். 'இது தவிர, சம்பந்தப்பட்ட மாணவியின் விடைத்தாள் திருத்தப்பட்ட மையம் மற்றும் விடைத்தாள்கள் திருத்திய ஆசிரியர் பற்றி விசாரித்து வருகிறோம்' என்றனர்.

விடைத்தாளை முறையாக திருத்தாததால் பாதிக்கப்பட்ட திவ்யா மட்டுமின்றி, மேலும் மூன்று மாணவியர், தேர்வுத் துறை இயக்குனர்அலுவலகத்தில், புகார் தெரிவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கிஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here