திருச்சி: ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களை, ஒரே வகுப்பில் உட்கார வைத்து பாடம் நடத்தியது கலெக்டர் ஆய்வில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கலெக்டர் ராசாமணி நேற்று முன்தினம், துவரங்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொண்டார்.
கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு திடீரென ஆய்வுக்கு சென்ற கலெக்டர், ஆசிரியை ஒருவர் வகுப்பு நடந்து கொண்டிருந்த அறைக்கு சென்றார்.
அங்கு மாணவர்களிடம் பேசுகையில், அவர்கள் ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் என்று தெரியவந்தது.
இதைக்கேட்ட கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். வகுப்பறைகளும் உள்ளது, ஆசிரியர்களும் போதிய அளவில் உள்ளனர்.
அப்படியிருந்தும் ஏன், இரு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் உட்கார வைத்து ஏன் பாடம் நடத்துகிறீர்கள்&' என்று கலெக்டர், அங்கிருந்த ஆசிரியையிடம் கேட்டார்.
அதற்கு அவரோ, சில ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கவுன்சலிங் சென்று விட்ட தால், ஒரே வகுப்பறையில் உட்கார வைத்ததாக கூறினார்.
சமாதானம் அடையாத கலெக்டர்,'எதுவாக இருந்தாலும், வெவ்வேறு வகுப்பு மாணவர் களை தனித்தனி அறைகளில் உட்கார வைத்துத் தான் பாடம் நடத்த வேண்டும்.
இவ்வாறுசெய்தது தவறு&' என்று, ஆசிரியையிடம் கடிந்து கொண்டார்.
இந்த சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் அந்த ஆசிரியை மற்றும் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை இருக்கும் என்று கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக