கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய பருத்தி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டு மே 31 வரையிலான பருத்தி விநியோகம் 378.5 லட்சம் மூட்டைகளாக இருந்தது (ஒரு மூட்டையில் 170 கிலோ). இந்தப் பருத்திப் பருவத்தின் தொடக்கமான 2017 அக்டோபரில் பருத்தி வரவு 30 லட்சம் மூட்டைகளாக இருந்தது. இதைத் தொடர்ந்து மே வரையிலான பருத்தி வரவு 340 லட்சம் மூட்டைகளாக இருந்தது. மே மாத இறுதி வரையில் இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி 8.50 லட்சம் மூட்டைகளாகும்.
இந்தப் பருவத்தின் இறுதியில், செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி பருத்தி விநியோகம் 410 லட்சம் மூட்டைகளாக இருக்கும். உள்நாட்டு நுகர்வு 324 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி 70 லட்சம் மூட்டைகளாகவும், பருவத்தின் முடிவில் இருப்பு 16 லட்சம் மூட்டைகளாகவும் இருக்கும். மே 31 வரையிலான காலத்தில் இப்பருவத்திற்கான 93 விழுக்காடு பருத்தி சந்தைக்கு வந்துவிட்டது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய பருத்தி சங்கத்தின் புள்ளி விவரக் குழுவின் கூட்டம் ஜூன் 11ஆம் தேதி புனேவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஜவுளி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 30 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக