பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக
பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக  பணி அமர்த்தப்பட உள்ளனர்*
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது*

இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது*

இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது*
இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்*

அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது*

அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது*

அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்*
அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்*

பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்*
இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்*

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here