*பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் கணினி வசதியுடன் கூடிய 42 மையங்கள் அமைக்கப்பட்டு பதிவேற்றம் நடந்தது.*
*குமரி மாவட்டத்தில் அரசு இணையதள உதவி மையங்களின் மூலம் 1,141 மாணவ, மாணவிகளும் தனியார் இணையதள மையங்கள் மூலம் 4727 பேர் என மொத்தம் 5868 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது*.
*வரும் 14ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். நேற்று, மொத்தம் 760 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இன்று முதல் தினசரி 940 பேருக்கும், இறுதி நாளான 14ம் தேதியன்று 408 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அரங்கிற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதால் காலை 8 மணி முதலே பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிய ஆரம்பித்தனர்.*
*✍காணொளி காட்சி விளக்கம்*
*நாகர்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் இன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் அமர்வதற்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறையில் சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி நடக்கும், கலந்தாய்வு எப்படி நடக்கும், கல்லூரிகளை எவ்வாறு ேதர்வு செய்வது என்பது குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது.*
*✍பொறியியல் கல்லூரிகள் பட்டியல்*
*பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. அவர்களுக்கு புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது. இந்த புத்தகத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பெயர் பட்டியல் கவுன்சலிங் கோட் எண் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்லூரிகளை முன்கூட்டியே அறிந்து தேர்ந்தெடுத்து வைத்து கொள்ள முடியும். இதனால் கலந்தாய்வின் போது கல்லூரிகளை எளிதாக தேர்வு செய்ய முடியும்*.
*✍தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு*
*கோணம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்தும் மாணவ, மாணவிகள் எப்போது வரவேண்டும் என்பது குறித்தும் தனி தனியாக எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் சிலர் இந்த சான்றிதழ் சரிபார்ப்பை தவறவிட்டு விடுகின்றனர். அவர்களுக்கு ஒரு மறுவாய்ப்பு அளிக்கும் விதத்தில் 14ம் தேதி இறுதிநாள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது மதியத்திற்கு மேல் விடுபட்டவர்கள் வந்து தங்களது சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக