இன்று போராட்டம் நடத்தவுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மிக முக்கியமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
தமிழக அரசு - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நியாயமான உரிமைகள், நிதி நிலுவைகள், வாழ்வாதார கோரிக்கைகள் போன்றவற்றிற்கு நல்ல தீர்வை இன்றே ஏற்படுத்திக்கொடுக்க முன்வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக