நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கின.
ஜூன் 20, 21 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்றது.
அதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்பட உள்ளன. கலந்தாய்வு முடிவுகளை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவர்கள் ஜூன் 23-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக