கர்ப்பிணிகளுக்குப் புதிய வசதிகள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கர்ப்பிணிகளுக்குப் புதிய வசதிகள்!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ‘சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்ப கால விவரங்களை மென்பொருள் மூலமாகப் பதிவு செய்யலாம்.

மேலும், 102 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டும், அரசு இ-சேவை மையத்தின் மூலமும், தாங்களாகவே https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பதிவு எண்ணைப் பெறலாம். அதைத் தொடர்ந்து நகரச் சுகாதார செவிலியர் ஒரு வார காலத்திற்குள் கர்ப்பிணிகள் பதிவு செய்த விவரங்களைக் கொண்டு, பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கும், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு ஆகியவற்றுக்குப் பதிவு எண் மிகவும் அவசியம்.

நகரச் சுகாதார செவிலியரிடம் கர்ப்பிணிகள் விவரங்களைப் பதிவு செய்தால், கர்ப்ப கால, பிரசவ கால மற்றும் தடுப்பூசி சேவைகள் குறித்த நினைவூட்டல் குறுஞ்செய்திகள் பெற முடியும்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். மேலும், குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் எளிதாக இணையதளத்திலிருந்து பெற, பதிவு செய்த அடையாள அட்டை மிகவும் அவசியம். இதைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு picmehelpdesk@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here