அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும், மாதாந்திர ஓய்வூதிய தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2015ம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும், ஓய்வூதியம் பெறும் வகையில், அடல் ஓய்வூதிய திட்டம் துவங்கப்பட்டது.
இதில், 18 - 40 வயதுடையவர்கள், மாதம் தோறும், குறைந்த பட்சம், 42 ரூபாயை, 20 ஆண்டுகள் செலுத்தினால், 60வது வயது முதல், இறப்பு வரை, 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
மற்றவர்களுக்கு, செலுத்திய தொகைக்கேற்ப, அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை, ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 20 - 30 ஆண்டுகளுக்கு பின், 5,000 ரூபாய் ஓய்வூதியம் போதாது என்பதால், ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஓய்வூதிய தொகையை, அதிகபட்சமான, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும், இத்திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயதை, 50 ஆகவும் உயர்த்த, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வரைவு மசோதா, நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக