📗📗📗📗📗📗📗📗📗📗
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திங்கள்கிழமை (ஜூன் 18) திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்பட 500-க்கும் அதிகமான கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுடன் 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகள் அனைத்திலும், 2018-19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அண்மையில் நடந்து முடிந்தது.
அரசுக் கல்லூரிகளில் அந்தந்த கல்லூரிகள் சார்பிலேயே கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 15) அன்றே திறக்கப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளையும் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) உத்தரவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளன.
அன்று கல்லூரிக்கு வரும் புதிய மாணவர்களை பழைய மாணவர்களுடன் வரவேற்க அரசு ஏற்பாடு செய்திருப்பதுடன், அவர்களுக்கு ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடத்தவும், ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும், கல்லூரிக்கு வரும்போது ஜீன்ஸ், டி-சர்ட், மிடி போன்ற ஆடைகளை உடுத்தி வரக் கூடாது என்ற விதி குறித்து அறிவுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசுக் கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக