ஒன்றரை ஆண்டுக்கு பிறகு வர்தா புயலுக்காக சம்பளம் பிடிப்பு: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு வர்தா புயலுக்காக சம்பளம் பிடிப்பு: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வர்தா புயலுக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பள பிடித்தம் செய்ய கோரிக்கை
மனு தற்போது ஏற்கப்பட்டது, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வர்தா புயலின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கோரி, கோரிக்கை மனுவை கடந்த 2016 ஆம் ஆண்டு அளித்த நிலையில் , அந்த சமயத்தில் மனுவை நிராகரித்த சூழலில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு தற்போது அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக வருவாய் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பின் போது, தமிழக அரசுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கோரி கடந்த டிசம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் என்பவர்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத் தொகையை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக பிடித்தம் செய்ய  வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த மனு நிராகரிக்கப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில், தற்போது அந்த மனுவை ஏற்பதாக வருவாய் துறையினர் தெரிவித்து  ராஜ்குமாருக்கு பதில் அளித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வர்தா புயல் பாதிப்புகள் அனைத்தும் முடிவடைந்து , நிதிகள் அனைத்து ஒதுக்கி நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த மனு ஏற்று கொல்லப்பட்டு இருப்பதால் , சம்பளம் பிடித்தம் செய்வார்கள் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உள்ளதாகவும் எனவே உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here