அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரி களில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355 எம்.பி.பி.எஸ்., - 1,095 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., - 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், அரசு மருத்துவக் கல்லுாரி களில் உள்ள, எம்.பி.பி.எஸ்.,படிப்புக்கு, 13 ஆயிரத்து, 600 ரூபாய்; பி.டி.எஸ்., படிப்புக்கு, 11 ஆயிரத்து, 600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, ஒரு லட்சம் முதல், நான்கு லட்சம் ரூபாய் வரையும்; பி.டி.எஸ்., சுக்கு,ரூ 2.50 லட்சம் பாயும், ஆண்டு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில்,நிர்வாக ஒதுக்கீட்டு, எம்.பி. .பி.எஸ்., படிப்புக்கு, 3.80 லட்சம் ரூபாயில் இருந்து, 12.50 லட்சம் ரூபாய்; பி.டி.எஸ்., படிப்புக்கு, ஆறு லட்சம் ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவகல்லுாரிகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.
முதற்கட்ட கவுன்சிலிங், 'ஆன்லைன்' வாயி லாக, நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தன. அதன் முடிவுகள், www.mcc.nic.in என்ற இணைய தளத்தில், இன்று வெளியிடப்படுகின்றன.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ