இந்திய அரசாங்கம் கல்வித் துறையை தாராளமயமாக்கல் மூலம் சர்வதேச பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை இந்தியாவின் உயர் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதற்கான விதிமுறைகளை இந்திய அரசானது உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பணிகளை அரசு மேற்கொண்டால், இந்திய மாணவர்கள் தரமான கல்வி கற்பதற்கு வழிவகைச் செய்யும்.
கல்வித் துறையை தாராளமயமாக்குவதற்கான முதல் விதை 1995ஆம் ஆண்டு விதைக்கப்பட்டது. அப்போது வெளிநாட்டுக் கல்வி மசோதாவைப் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், அதற்குப் பின் அந்த மசோதா அடுத்த கட்ட நகர்விற்குக் கொண்டு செல்லப்படவில்லை. 2005-06ஆம் ஆண்டு அதற்கான வரைவுச் சட்டம் மத்திய அமைச்சரவைக்குச் சென்றடைந்தது. அதற்குப் பின்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2010ஆம் ஆண்டு வரைவுச்சட்டத்தில் சில மாற்றங்களுடன் கொண்டுவர முற்பட்டபோது, கடுமையான எதிர்ப்பினால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. தற்போது, மசோதாவானது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், 20 புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அமைப்பதற்கான புது ஆலோசனையை வழங்கியுள்ளது. வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத நிர்வாக முறைகளையும் மற்றும் சுய நிதியையும் கொண்டிருக்க வேண்டும். மேலும், அரசு அதிகாரிகளின் குறைந்த அளவிலான குறுக்கீடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தங்களுக்கான அலுவலர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையுண்டு. மேலும் வெளிநாட்டு மாணவர்களை தங்களின் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த முன்முயற்சியானது உயர் கல்வி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் சில பங்குதாரர்களும் இதனால் பயனடைவர். நேரடி அந்நிய முதலீடு என்பது கல்வித் துறையில், கல்லூரிகளின் வரிசையை அதிகரிக்கச் செய்யும். இதனால் மாணவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். இது மாணவர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதோடு, கல்விச் சேவையையும் மேம்படுத்தும், இதனால் இந்தியாவின் கல்வி தரம் என்பது மேம்பாடு உடையதாக மாறும். மேலும், இது தொலைத் தொடர்பு, காப்பீடு, விமானத் தொழில் போன்ற தனியார் துறைகளில் போட்டி அதிகரிக்கும் என்பதால் நிறுவனங்களின் தரம் மற்றும் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் நுழைவு என்பது நிச்சயம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். கற்பித்தல் முறைகளும், ஆராய்ச்சிகளும் தரம் வாய்ந்தவையாகக் காணப்படும் மற்றும் பயன்பாடு சார்ந்த கற்றல் முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கற்பிக்கும் முறையானது போதனைக் கல்வியாக இருக்காது. இதனால் நம்நாடு திறன் இடைவெளியை இணைப்பதற்கான வாய்ப்பையும், இந்தியா நீண்ட காலமாக சந்தித்த சவால்கள்முறியடிக்கப்பட்டு, திறமை மிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள்.
புகழ்பெற்ற கல்வி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் வரவேற்பது ஒருபக்கம் இருந்தாலும், அந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் அவசியம். மேலும், அரசானது உள்கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்துதல், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்குப் பல்துறை வல்லுநர்களையும் இணைப்பதன் மூலம் தரமான கல்வியை இந்த நாட்டிற்கு அளிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக