திருவனந்தபுரம்: சீஜா, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சீரயங்கிழு பகுதியைச் சேர்ந்தவர். காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் ஓமன் நாட்டில் மஸ்கட்டில் 2016-ம் ஆண்டு முதல் பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறார். கணவர் பிஜுமோன் என்பவரும் அதே பகுதியில் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தார்.சீஜாவிற்கு பணிபுரியும் வீட்டில் ஊதியம் தராமல் இருந்துள்ளனர். மேலும் உணவு வழங்காமல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். அந்த வீட்டிலிருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.மாடியிலிருந்து குதித்த சீஜாவின் இடுப்புக்கு கீழ்பகுதி முழுவதும் செயல் இழந்தது. இதையடுத்து, அவர் ஓமன் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.தகவல் அறிந்த வீட்டு உரிமையாளர் நஷ்ட ஈடு ஏதும் வழங்காமல் சீஜாவை அவருடைய சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். மேல்சிகிச்சைக்குப் பணமின்றி தவித்துவரும் சீஜா குடும்பத்தினர், வீட்டு உரிமையாளரிடமிருந்து உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
Post Top Ad
Home
Unlabelled
ஓமன் நாட்டில் இந்திய பெண் சித்ரவதை! மாடியிலிருந்து குதித்தார்!!
ஓமன் நாட்டில் இந்திய பெண் சித்ரவதை! மாடியிலிருந்து குதித்தார்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக