🔴🔵🌐தொழில் துறை, வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் கே.பி.அன்பழகன்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔴🔵🌐தொழில் துறை, வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் கே.பி.அன்பழகன்*

கல்வி, ஆராய்ச்சியில் மட்டுமின்றி தொழில் துறையிலும், வேலைவாய்ப்பிலும் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 38 -ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் ஆளுநர் வழங்கினார்.

பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் விழாவில் பேசியதாவது:

உயர் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் காரணமாக, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது.

உயர் கல்வி மாணவர் சேர்க்கை (ஜி.இ.ஆர்) சதவீதம் 25.2 என்ற நிலையில் உள்ளது. இதை வரும் 2020 -இல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தச் சூழலில் 46.9 சதவீத மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பெற்று வளரும் நாடுகளின் 36 சதவீதம் என்ற அளவையும் தாண்டி தமிழகம் பெருமை சேர்க்கிறது.
இதேபோன்று, மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் (2018) முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 4 -வது இடத்தில் உள்ளது.

ஆராய்ச்சித் துறையிலும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னோடியாக திகழ்கிறது.

இதுமட்டுமின்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2017-18 அறிக்கைபடி, ஆராய்ச்சிப் படிப்பில் தமிழகம் உயர்வான இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் 28,684 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here