கோவை வேளாண் பல்கலையில் தரவரிசை பட்டியல் வெளியீடு: திண்டுக்கல் மாணவி ஆர்த்தி முதலிடம்* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் முதன் முறையாக பொதுப்பிரிவு மாணவர்களுக்க - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கோவை வேளாண் பல்கலையில் தரவரிசை பட்டியல் வெளியீடு: திண்டுக்கல் மாணவி ஆர்த்தி முதலிடம்* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் முதன் முறையாக பொதுப்பிரிவு மாணவர்களுக்க

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் முதன் முறையாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரி என மொத்தம் 40 கல்லூரிகளின் மூலம் 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான, இணையதள விண்ணப்ப பதிவேற்றம் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது.

பின்னர், கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்கள் நேரடி கலந்தாய்வில் பங்கேற்க சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது.

இந்நிலையில் நேற்று, இளங்கலை மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை பல்கலையின் துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்.

இதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த கார்த்திகா 199.67 கட்ஆப் பெற்று 2ம் இடமும், கோவை வடவள்ளியை சேர்ந்த மேகனா 199.05 கட்ஆப் பெற்று 3ம் இடமும் பிடித்தனர். முதல் 10 இடங்களில் 2 ஆண்கள் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 100 பேர் 197 கட்ஆப் பெற்றுள்ளனர். 200 பேர், 195.75 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 

இதுகுறித்து வேளாண் பல்கலையின் துணைவேந்தர் ராமசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வரும், ஜூலை 7ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.

இதை தொடர்ந்து ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் முறையாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.

தொழில்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16ம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17,18 ஆகிய தேதிகளிலும்
நடக்கிறது. இதனை தொடர்ந்து, 2ம் கட்ட கலந்தாய்வு 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.

இணையதளம் மூலம் நடக்கும் கலந்தாய்வில் ‘ஸ்லைடிங்’’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இளங்கலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது.

மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.  இவ்வாறு ராமசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here