கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இதனையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 16ஆம் தேதி இந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 14ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஜூலை 16) அனுசரிக்கப்படுகிறது.
பள்ளியின் முன்பாக 94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்து வைத்து, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும், பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று மவுன அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் மவுன ஊர்வலமாக மகாமகம் குளத்துக்குச் சென்று, தீவிபத்தில் இறந்த குழந்தைகள் 94 பேரின் நினைவாக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக