அறிவிக்கப்பட்டது. 'இந்த விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பை விட குறைந்த அளவு ஆசிரியர்களே விண்ணப்பித்ததால், கூடுதலாக, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்படி, வரும், 15ம் தேதிக்குள், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 'இந்த விண்ணப்பங்களை மாவட்ட பரிசீலனை குழுவினர் ஆய்வு செய்து, வரும், 16ம் தேதி முதல், 24ம் தேதிக்குள், மாநில கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
'மாநில கமிட்டியினர், ஜூலை, 31க்குள், மத்திய அரசின் தேசிய விருது பரிசீலனை கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக