*🌐பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது*
*🌐அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் (RMSA) கீழ் கடந்த 2009-10ம் கல்வி ஆண்டில் 200 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நலத்துறை நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது*
*🌐இந்த பள்ளிகளுக்கு தலா 6 பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் வீதம் 1200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 1400 பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்கி அரசு ஆணையிட்டது*
*🌐கடந்த மாதத்துடன் இந்த தொடர் நீட்டிப்பு முடிந்தது*
*🌐அதனால் 1.6.18 முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டார்*
*🌐பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்கண்ட 1400 பணியிடங்களுக்கும் 1.6.18 முதல் 31.5.2021 வரை மூன்று ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்து நிதித் துறையின் மறு ஆய்வு முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக