சென்னைப் பல்கலை. இலவசக் கல்வித் திட்டம்: 272 பேர் சேர்க்கை* *🔷சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் 272 மாணவ, மாணவிகள் பல்வேறு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சென்னைப் பல்கலை. இலவசக் கல்வித் திட்டம்: 272 பேர் சேர்க்கை* *🔷சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் 272 மாணவ, மாணவிகள் பல்வேறு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்*

*🔷சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்*

*🔷குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாத ஏழை மாணவர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கடந்த 2010 -11 ஆம் ஆண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது*

*🔷2018-19 -ஆம் கல்வியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற 721 பேர் விண்ணப்பித்தனர். இதில் 569 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வில் 347 பேர் பங்கேற்றனர்*

*🔷இவர்களில் 272 பேர் தேர்வு செய்யப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்திருக்கும் 83 கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here