*💎வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது*
*💎கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லுாரிகள் வாயிலாக, 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன*
*💎2018 - 19ம் கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட, 3,422 இடங்களுக்கு, ஆன்லைன் கலந்தாய்வு, வரும், 9ல் நடக்கிறது*
*💎10 ஆயிரம் பேர் பங்கேற்பு*
*கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து* *பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது*
*💎சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளையும், தொடர்ந்து, ஜூலை 9 முதல், 13ம் தேதி வரை பொதுபிரிவினருக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது. 10 ஆயிரம் பேர், முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்கின்றனர்*
*💎தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, கலந்தாய்வு தகவல்கள், இ - மெயில் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது*
*💎மாணவர்கள் tnauonline.in என்ற இணையதள முகவரியில், ஆன்லைன் கலந்தாய்வில் பங்குபெறலாம்*
*💎முதலில், கலந்தாய்வு கட்டணத்தை செலுத்திய பிறகே, அடுத்த நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்.கலந்தாய்வில், ஆன்லைன் விண்ணப்பத்தில் தேர்ந்தெடுத்த கல்லுாரி மற்றும் பாடங்களை மாற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜூலை, 9 முதல் 11 வரை எவ்வுளவு முறை வேண்டுமானாலும் கல்லுாரி, பாடங்களை மாற்றிக்கொள்ளலாம்*
*💎ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும்போதும், 'சேவ்' பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 'பைனல் சப்மிட்' பட்டனை கிளிக் செய்த பின், கவுன்சிலிங் நடைமுறை முடிந்துவிடும்*
*💎இதற்கு பின், கல்லுாரி மற்றும் பாடங்களை மாற்ற முடியாது*
*💎19ல் சான்று சரிபார்ப்பு*
*ஜூலை 12 ம் தேதி* *www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதள* *முகவரியில், இட ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படும்*
*💎லாகின்' செய்து, தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒதுக்கீட்டு ஆணையில், குறிப்பிட்ட தேதியில் சேர்க்கை கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்*
*💎தொழில் கல்விக்கு, 16ம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 17, 18ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடக்கிறது*
*💎தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, இடங்களை உறுதிப்படுத்துவதற்கு, ஜூலை, 19, 20,21 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது*
*💎இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு, 23 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது*
*💎இதில், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பிறகு உள்ள காலி இடங்களை பொறுத்து, மதிப்பெண் அடிப்படையில் விரும்பிய கல்லுாரியை மீண்டும் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது*
*💎மாணவர்களின் வசதிக்காக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், கலந்தாய்வு வழிகாட்டல் கையேடு, வீடியோ பதிவு பல்கலை இணையதளத்தில், நாளை பதிவேற்றப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக