*💎பள்ளி கல்வித்துறையின் நிர்வாக சீர்திருத்தம் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, 9ம் தேதி முதல், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது*
*💎தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன*
*🏀🏀52 மாவட்டங்கள்*
*💎மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் போன்ற பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உதவி தொடக்க கல்வி அதிகாரி பதவியும், வட்டார கல்வி அதிகாரி என, மாற்றப்பட்டுள்ளது*
*💎அத்துடன், ஏற்கனவே இருந்த, 67 கல்வி மாவட்டங்களுடன், புதிதாக, 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன*
*💎இதுவரை, ஒவ்வொரு இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்த நிலையில், தற்போது ஒரே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்*
*💎ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தங்கள் எல்லையில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் நிர்வாகத்தையும், கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது*
*💎இந்நிலையில், நிர்வாக சீர்திருத்தப்படி, கல்வி அதிகாரிகளுக்கான பணிகள் என்ன; பொறுப்புகள் என்ன; அவர்களின் அதிகாரங்கள் என்ன என்று தெரியாமல், மாவட்ட கல்வி அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். அதை போக்கும் வகையில், நிர்வாக ரீதியான சிறப்பு பயிற்சிக்கு, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது*
*💎இந்த பயிற்சி, 9ம் தேதி முதல், நான்கு நாட்கள் நடக்கிறது. 9ல், சென்னை; 10ல், திருச்சி; 11ல், திருவண்ணாமலை மற்றும், 12ம் தேதி கோவையில் பயிற்சி நடக்கிறது. இதில், இணை இயக்குனர்கள், நாகராஜ முருகன், ராதாகிருஷ்ணன், சுகன்யா மற்றும் வாசு ஆகியோர் பங்கேற்று, பயிற்சி அளிக்கின்றனர்*
*💎சென்னையில் நடக்கும் பயிற்சியின் துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக