*🔷எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்தபோது, சான்றிதழ்களைத் தொலைத்த மாணவனுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளித்தது*
*🔷விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பூபதி ராஜா, எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் கலந்துகொள்ள சென்னை வந்தார்*
*🔷அசல் சான்றிதழ்கள் அடங்கிய பையை பூபதி ராஜா தொலைத்து விட்டார். இதனால், அவர் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை*
*🔷இது குறித்து நாளிதழ்களில் வந்த செய்திகளைப் படித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை வழக்குரைஞரை அழைத்து மாணவன் பூபதி ராஜா கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டிருந்தார்*
*🔷நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வியாழக்கிழமை ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் முனுசாமி, மாணவர் பூபதி ராஜாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால், அவர் அரசை இதுவரை அணுகவில்லை எனத் தெரிவித்தார்*
*🔷இதைத் தொடர்ந்து மாணவர் பூபதிராஜா உதவி கோரி வந்தால், அனைத்து உதவிகளையும் அரசு விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக