*🔴மரக்காணம் அருகே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை பூட்டி மாணவர்கள், பெற்றோர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்*
*🔴விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வசவன்குப்பம் மீனவர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது*
*🔴70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிவதாகவும், அதிலும் தலைமை ஆசிரியர் கடந்த சில நாள்களாக விடுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது*
*🔴ஒரு ஆசிரியர் மட்டுமே கற்பித்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் ஆகவே, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்களும், பெற்றோரும் கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்*
*🔴இந்த நிலையில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறையைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு பூட்டுப் போட்டு மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்*
*🔴தகவல் அறிந்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், இளஞ்செழியன், மரக்காணம் காவல் ஆய்வாளர் (பொ) மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்*
*🔴அப்போது, கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பெற்றோரும், மாணவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக