கிடையாது; ஆணுக்கு மட்டுமே தண்டனை என்று இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 497 கூறுகிறது.
ஒரு குற்றத்தில் தொடர்புடைய ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, அநீதியானது, சட்ட விரோதமானது, ஒருதலைபட்சமானது, அடிப்படை உரிமைகளை மீறுவது, பாலின சமநிலைக்கு மாறானது. எனவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் சைன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் ஏற்கெனவே மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரியிருந்தது. அதில், திருமணமான பெண்ணுடன் அவரது கணவர் அனுமதி இல்லாமலோ, அனுமதியுடனோ வேறு ஒரு திருமணமான ஆண் உடலுறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது. அந்த ஆணுக்கு ஐந்து ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் அந்தப் பெண்ணுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அப்படியிருக்க அந்த ஆணுடன் சேர்த்து அந்தப் பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்படாதது ஏன் என்பதற்கு விளக்கம் தேவை என்று கேட்கப்பட்டது.
இந்த நிலையில் திருமணத்தை மீறிய தவறான உறவு விவகாரத்தில் பெண்களையும் குற்றவாளியாக்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பிரிவு 497 திருமணத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், திருமண பந்தத்திற்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கவும்தான் இயற்றப்பட்டது என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக