*🔶கேரளத்தில் பிளஸ் 2 பயின்று, தமிழக ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரிய வழக்கில், 3 மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது*
*🔶இதுதொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஜி.அதுல்சந்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்*
*🔶எனது குடும்பம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது. நான் ஏழாம் வகுப்பு வரை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் படித்தேன்*
*🔶பின்னர் 8 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தேன். நீட் தேர்வில் 339 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 789 ஆவது இடத்தை பிடித்துள்ளேன்*
*🔶இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை*
*🔶தேர்வுக்குழுவுக்கு தமிழக அரசு வழங்கிய இருப்பிடச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் அனுப்பியும் எனது பெயர் பரிசீலிக்கப்பட வில்லை. இந்நிலையில் கலந்தாய்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது*
*🔶எனவே நீட் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது*
*🔶இதேபோல, கேரளத்தில் பிளஸ் 2 படித்து தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய தங்களுக்கும் தமிழக ஒதுக்கீட்டின்கீழ் நீட் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மேலும் இரு மாணவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்*
*🔶இந்த மனுக்கள், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது*
*🔶மனுக்களை விசாரித்த நீதிபதி, அதுல் சந்த் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் தமிழக ஒதுக்கீட்டின்கீழ் நீட் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு வழக்கின் இறுதித் தீர்ப்புக்குள்பட்டது எனவும் உத்தரவிட்டுள்ளார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக