ஜோதிடர்கள் கணிப்பு: ஜெயி்க்கும் கூட்டணி எது ? ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு... தமிழக சட்டசபை தேர்தலுக்கு, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால், என்னென்ன பலாபலன்கள் கிடைக்கும் என, கட்சிகள் கணக்குப் போட்டு வரும் வேளையில், தேர்தல் கமிஷன், தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. 'தேர்தலுக்கு இன்னும், 70 நாட்கள் இருக்க, 'இந்த கிரக நிலைக்கு, இந்த கூட்டணி தான் ஏற்றது' என்கின்றனர் சில ஜோதிடர்கள்.பெரும்பாலானோர், அ.தி.மு.க., வெற்றி பெறும் எனக் கூறுகின்றனர்; ஒரு சிலரோ, ஸ்டாலின் தலைமையில் கூட்டணி இருந்தால், அக்கட்சி நிறைய இடங்களில் வெற்றி பெறும் என்கின்றனர்.ஜோதிடர்கள் கணிப்பு பலிக்கிறதா என்பது, ஓட்டு எண்ணிக்கை அன்று தெரியப் போகிறது. அதற்கு முன், கணிப்பு கூறியுள்ளவர்களில் சிலர் கருத்துகளைப் பார்ப்போம்: ஆமா எந்த ஜோசியரும் பிஜேபி பத்தி ஒண்ணுமே சொல்லலியே.. அதோட "குண்ட்லி" கெடைக்கல்லியா?
ஜோதிடர் கீ.பரணிதரன், திருக்கோவிலுார்:
ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச் செயலரின் ஜனன ஜாதகத்தையும், ஓட்டுப்பதிவு நாளின் கிரக நிலைகளையும் வைத்து பார்க்கும் போது, அவருக்கு வெற்றி கிடைக்கும். கருணாநிதி, தி.மு.க., தலைவர்: ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர். இவருக்கு மேஷத்தில் புதன்; ரிஷபத்தில் சந்திரனுடன், சூரியன்; மிதுனத்தில் சுக்கிரன்; சிம்மத்தில் ராகு; துலாமில் சனி; விருச்சிகத்தில் குரு; மகரத்தில் செவ்வாய்; கும்பத்தில் கேது என்று ஜனன கால ஜாதகத்தில் கிரக நிலை அமைந்துள்ளது. இந்த தேர்தல் இவருக்கு பின்னடைவை உண்டாக்கும்.
விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்: இவரின் ஜனன ஜாதகத்தையும், கிரக நிலைகளையும் பார்க்கும்போது, வாக்கு ஸ்தானம் என்னும், இரண்டாம் வீட்டில் செவ்வாயும், சனியும் வக்கிரமடைந்துள்ளன. இவர், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றால், வெற்றி கிடைக்கும். ஜெயலலிதா ஆட்சி அமைக்க, இழுபறி ஏற்படும். கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றால், எதிர்கால அரசியல் பாதிப்படையும். வைகோ, ம.தி.மு.க., பொதுச் செயலர்: இவரது அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தால், இரண்டாம் இடம் பெறலாம்.
ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்: ஜெயலலிதா: அ.தி.மு.க., கட்சி ஆரம்பித்த நாள், 17.10.1972; இதன் கூட்டு எண், 1; விதி எண், 9. ஜெயலலிதா பிறந்த நாள், 24.2.1948; கூட்டு எண், 4; விதி எண், 8. இவரது ஜாதகப்படி, வெற்றி வாய்ப்பு அதிகம். கருணாநிதி:இவரது ஜாதகப்படி, இரண்டாவது இடம் பெற வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்தில் பா.ஜ., வாய்ப்பு உள்ளது.
ஆர்.கே.வரதராஜன், காஞ்சிபுரம்:
அ.தி.மு.க., 125 முதல், 140 இடங்கள் வரை பெறும். மத்திய அரசில், ஆளும் கட்சியாக உள்ள, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு வாய்ப்பு அதிகம். தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு குறைவு. எனினும், 70 இடங்கள் வரை பெறும். தே.மு.தி.க., அதிக இடங்களை கூட்டணியில் கேட்டு பெற்றாலும், 30 இடங்கள் வரை மட்டுமே, வெற்றி பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் மற்றும், தே.மு.தி.க., கட்சிகளுக்கு, இம்முறை பாதிப்பு ஏற்படும்.
சிவ அண்ணாமலை தேசிகர், புவனகிரி:
ஓட்டுப் பதிவு நடக்கும், 2016, மே 16 அன்று உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசியில், மிதுன லக்னத்தில், ஓட்டுப் பதிவு துவங்கும் நேரத்தில், எண் கணிதப் படியும், ஜோதிட ரீதியாகவும், தசா புத்தி பலன்கள் அடிப்படையிலும், கேது பிளஸ் குரு என்ற அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு,அனைத்து கிரகங்களும், யோகப் பார்வையில் உள்ளன. குரு யோக நிலையில் உள்ளதால், அ.தி.மு.க., 142 இடங்களை பிடிக்கும். ஸ்டாலினுக்கும், யோக திசை நடப்பதாலும், இந்த நாளில் தேர்தல் நடைபெறுவதால், அவருக்கு, 60 சதவீதம் சாதக தன்மை உள்ளதால், தி.மு.க., கூட்டணி, 82 இடங்களை கைப்பற்றி, வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும்.விஜயகாந்த் மற்றும் காங்., துணை தலைவர் ராகுலுக்கு, திசை சரியில்லாத காரணத்தால், இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளின் ஓட்டு சதவீதம் குறையும். ஆனால், மோடிக்கு நேரம் நன்றாக உள்ளதால், பா.ஜ., தமிழகத்தில் கால் பதிக்கும்.நால்வர் அணி கடைசி நிலைக்கு தள்ளப்படும். பா.ம.க.,விற்கு நால்வர் அணியை விட, சற்று கூடுதலாக ஓட்டு கிடைக்கும்.
ஜோதிடர் சோமசேகரன்:
ஜெயலலிதா: நடப்பு தசா புத்தி, வலுவான போட்டியை ஏற்படுத்தி உள்ளது. உடல் நிலை சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு, சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பூர்வ புண்ணிய பாவம் வலுவாக உள்ளதால், கோச்சார ரீதியாக, நேரம் நன்றாக இருப்பதால், இவருக்கு வாய்ப்பு சற்று கூடுதல். கருணாநிதி:இவருக்கு நீண்ட நாட்களுக்கு பின், நல்ல நேரம் ஆரம்பிக்க உள்ளது. எனினும், புத்திர பாவம், பூர்வ புண்ணிய காலம் சற்றே சரியாக இருப்பதால், கூட்டணி சேர்ந்தால்மட்டுமே, ஆதாயம் பெற முடியும். ஸ்டாலின்: கோச்சார ரீதியாக, நேரம் நன்றாக இருந்தாலும், நடப்பு தசாபுத்தி சரியாக இல்லாததால், தந்தையை முன்னிறுத்துவது நல்லது. சுய கவுரவத்தை விட்டுக் கொடுத்தால், மட்டுமே வெற்றி. விஜயகாந்த்: நேரம் நன்றாக இருந்தாலும், காலம் தாழ்ந்து எடுக்கக்கூடிய முடிவால், சென்ற முறை கிடைத்த அங்கீகாரம், இம்முறை கிடைப்பது சிரமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக