ஆசிரியர்களை அலைக்கழித்த அரசு வங்கி (SBI) விஜய் மல்லையாவால் அல்லல்படுகிறதா? இனிமேலாவது அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை ஏற்படுமா?? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்களை அலைக்கழித்த அரசு வங்கி (SBI) விஜய் மல்லையாவால் அல்லல்படுகிறதா? இனிமேலாவது அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை ஏற்படுமா??

இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர் மற்றும் அதிக கிளைகள் கொண்ட வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் சமீப காலமாக வராக்கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது.

மத்திய தர வருவாய் பிரிவினரான ஆசிரியர்கள் கல்விக்கடன்,வீட்டுக்கடன்,தனிநபர் கடன் கோரி வங்கிக்கு சென்றால் அரைமணி நேரமாவது காத்திருக்க வைத்து தான் நமது கோரிக்கையை கேட்கின்றனர்.பின்பு வீட்டுக்கடன் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதற்குறிய ஆவணங்கள் பின்வருவனவற்றை கொடுக்குமாறு கூறுகின்றனர்.

1.நிலப்பட்டா
2.பத்திரம்
3.கட்டிட பொறியாளர்பிளான் அப்ரூவல்
4.நகர, ஊராட்சி பிளான் அப்ரூவல்
5.வழக்கறிஞர் NOC சான்றிதழ்
6.ஜாமின்தாரர் ஒப்புதல்
7.வீடு கட்டி முடித்தவுடன் வீட்டை வங்கி பெயருக்கு பத்திரப்பதிவு செய்தல்
8.சம்பளச்சான்று
மேற்கன்ட ஆவனங்களை தாயார் செய்து முடிக்க 2 மாதங்கள் கடந்துவிடும்

பின்பு கட்டிட பொறியாளர் மதிப்பீட்டில் 85% மட்டுமே வீட்டுக்கடன் அனுமதி கொடுக்கின்றனர். என்றாலும் Take home salary. என்ற விதிமுறைப்படி 85% க்கு குறைவான கடனே வழங்கப்படுகிறது.இதில் கடன் தவனைத் தொகையை (EMI) சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்ற நிபந்தனையும் உண்டு.

ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே.சாமானியன் என்றால் வங்கி மேலாளரை வீட்டில் பார்த்தால் மட்டுமே கடன் உறுதி செய்யப்படும்.

பெருமுதலாளிகள் என்றால் கடன் வழங்க வங்கிகள் போட்டி போடுகின்றனர்.அப்படி போட்டிபோட்டு ஜெய்த்த வங்கிகள்தான் SBI,சின்டிகேட் வங்கி,பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள். அவற்றில் கம்பெனிகள் விரிவாக்கத்திற்கு ஊகத்தின் அடிப்படையில் அதிகமான கடன் வழங்கப்படுகிறது.
பெருநிறுவனங்கள் புதிதாக தொடங்க திட்டமிடும் தொழிலுக்கு வரைவு திட்ட அறிக்கை மட்டுமே போதுமானது என வங்கிகள் ஏற்றுக்கொண்டன.
விஜய்  மல்லையா தான் நடத்திய தொழிற்சாலை நஷ்டமடைந்துவிட்டதாக கூறி கடனை திருப்பிச் செலுத்தவில்லை.காரணம் வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை வராக்கடன் என்று கூறி விட்டுவிடுகின்றன.இது பல ஆண்டுகளாக வங்கிகள் பெருமுதலாளிகளுக்கு வழங்கிவரும் பரிசு.ஆனால் ஒரு அரசு ஊழியர் வீட்டுக்கடன் வாங்கிவிட்டு இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் கொண்டு கடனை திரும்ப செலுத்த இயலாது எனக்கருதி சொத்தை ஏலம் விடும் நடைமுறை உள்ளது.
விஜய் மல்லையா விசயத்தில் அவ்வாறில்லை அவர் வாங்கிய கடனுக்கும் (₹7000கோடி)அவரிடமுள்ள சொத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. காரணம் அவர் ஒரு NRI. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்.வெளிநாடு சென்றுவிட்டார் என்ற வதந்தி வேறு.
கோர்ட் படியேறியது எஸ்பிஐ வங்கி.வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர் என அறிவிக்கக்கோருகிறது.

இந்த நிலையில் ஒரு ஆசிரியர் இருந்தால் முதலில் துறை ரீதியான நடவடிக்கையில் இறங்கி கீழ்நீதிமன்றம் சென்று சம்பளத்தில் பிடித்தம் செய்திருப்பார்கள்.அசலும் வட்டியும் கிடைத்துவிடும்.ஆனால் இன்று விஜய மல்லையாவால் முதலுக்கே மோசம் ஏற்பட்டுவிட்டது.இப்பொழுது உங்கள் விதிமுறைகள் யாரை கட்டுப்படுத்துகின்றன.
யாருக்காக விதிமுறைகள் கல்விக்கடன் பெற்ற ஏழை மானவர்களுக்கா?
மாதச்சம்பளம் வாங்கி வருமான வரியை சரியாக செலுத்திவரும் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கா?
₹7000கோடி பேப்பரில் மட்டுமே உள்ளது யார் பொருப்பு? கடன் கொடுத்த வங்கி கிளை மேலாளர் பொறுப்பு என்றால் கடன் தொகை திரும்ப கிடைக்குமா? தலைமை இயக்குனர் பொறுப்பா?  இந்த நிலையில் வங்கிகளின் வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. பணம் சேரவேண்டிய இடத்திற்கு சரியாக செல்கிறதோ?

வழக்கம் போல உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு ஒன்றை வழங்கும். அதற்குள் விஜய் மல்லையா போன்றோர் ராஜவாழ்கை வாழ்ந்துவிடுவார்கள்.மக்களின் வரிப்பணம் எங்கே? ? ? ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here