கடந்த 2011 சட்டசபை தேர்தலில் மாண்புமிகு அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பினை 6 மாதமாம நீட்டிப்பதாக கூறி ஆட்சி பொறுப்பேற்றதும் 6 மாதமாக நீட்டித்து உத்தரவிட்டார்கள்.
2016 சட்டசபை தேர்தலில் மாண்புமிகு அம்மா அவர்கள் பெண் ஊழியரின் மகப்பேறு விடுப்பினை 9 மாதமாக அதிகரிப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கூறினார்கள்.
தேர்தலில் மீண்டும் வரலாற்று வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.எங்களின் பேராதவையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிலையில் பெண் அலுவலர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதமாக நீட்டித்து மாண்புமிகு அம்மா அவர்கள் எப்போது உத்தரவிடுவார்கள் என்ற ஏக்கத்தில் அனைத்து பெண் அலுவலர்களும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக