தமிழக சட்ட ஒழுங்கு பற்றி கருணாநிதி அறிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழக சட்ட ஒழுங்கு பற்றி கருணாநிதி அறிக்கை

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை 9,948 படுகொலைகளும், சுமார் ஒரு இலட்சம் கொள்ளைகள்....
📌📌📌📌📌📌📌📌📌📌📌
-கருணாநிதி அறிக்கை
KalaignarKarunanidhi 
📌📌📌📌📌📌📌📌📌📌📌
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இலட்சணம்!
📌📌📌📌📌📌📌📌📌📌📌
சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது என்று ஆளுநர் உரையிலானாலும், முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் உரைகளினாலும், திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். காவல் துறை அ.தி.மு.க.வின் ஏவல் துறையாகி, எடுத்ததற் கெல்லாம் எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்து பிராண்டுவதும், ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக் கைகளைக் கூடப் பொறுத்துக் கொள்ளாமல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களிடம் கூடத் தடியடி - கைது எனத் தர்பார் நடத்துவதும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிப்பதை மறந்து விட்டு "டாஸ்மாக்" கடைகளைப் பாதுகாப்பதும், ஆளுங் கட்சியினரை மட்டும் அரவணைப்பதும், அவர்களோடு கைகோர்த்துக் கொள்வதும், குற்ற நிகழ்வுகளில் புலனாய்வு செய்வதை விடுத்து அவற்றுக்கு மறைமுகமாகத் துணை போவதும் தான் இங்கே நடைபெறுகிறது. 

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை 9,948 படுகொலைகளும், சுமார் ஒரு இலட்சம் கொள்ளைகள், திருட்டுகள் நடந்துள்ள தாகச் செய்திகள் வந்துள்ளன. கொலை மற்றும் கொள் ளையை மட்டும் எடுத்துக் கொண்டால் தமிழகத் தில் தினமும் சராசரியாக 7 கொலைகளும், 70 கொள்ளைகளும் நடந்து வருகின்றன. பெண் களுக்கு எதிரான குற்றங்களும் அச்சமளிக்கும் வகையில் அதிகரித்துவிட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின் றனர். பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

முக்கிய கொலைகளில் குற்றவாளி களைக் கண்டுபிடிப்பதிலும் இந்த அரசு திறமையாகச் செயல்படவில்லை. அதற்கு உதாரணம் தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. திருச்சி யில் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடைபெற்று எத்தனையோ மாதங்கள், ஆண்டுகளாகியும் குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 10-8-2016 அன்று இந்தக் கொலை வழக்கை விசாரிக்க சி.பி., சி.ஐ.டி., போலீசாருக்கு இறுதி வாய்ப் பாக இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறை அதிகமாக நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணை யத்தின் தலைவர் புனியா குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபின், ஆதி திராவிடர்களுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 213 கொலைகள் நடைபெற்றுள்ளன. 192 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதே போன்று 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 118 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 6,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆதி திராவிடர்களுக்கு எதிராக வன்முறை அதிகமாக நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது தலைகுனிவைத் தரும் தகவலாகும். 
"பீரோ ஆப் போலீஸ் ரிசர்ச் அன்ட் டெவலப் மென்ட்"" வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தி யாவிலேயே அதிக போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது. அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் போராட்டங்கள், மத ரீதியாக நடந்த போராட்டங்கள் என்று சமூக அமைதியின்மையின் வெளிப்பாடாக ஆர்ப்பாட்டங் கள், போராட்டங்களிலும் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக் கியதுதான் ஜெயலலிதா அரசின் சாதனை(!). 

நாட்டிலே வாழும் சராசரி மனிதனுக்கு, இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை மாறி, மதுரையிலே உள்ள தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதி அலுவலகம் மற்றும் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதலில், நாட்டு வெடி குண்டுகளும், மண்ணெண்ணெய் குண்டு பாட்டில்களும் 9-1-2016 அன்று வீசப்பட்டுள்ளன. 

மற்றொரு அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி யம்! அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒருவரே அமைச்சரைக் கண்டித்து விஷம் குடித்திருக்கிறார். அவருடைய மகளுக்கு சமையலர் வேலை வாங்கித் தருவதற்காக 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் வேலை வாங்கித் தரவில்லை என்றும் செய்தி வந்தது. அவர் ஏமாந்தது பற்றி காவல் துறை அதிகாரியிடம் புகார் செய்யச் சென்றபோது, அமைச்சருக்கு வேண்டிய வர்கள் அவரைக் கடத்திச் சென்றதாகவும் செய்தி வந்தது. 

ஏன், நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாதான் தன் சாவுக்குக் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டு மாண்ட ஆதிதிராவிடர் நாகமுத்து பற்றிய வழக்கு போல இன்னும் பல வழக்குகள் அமைச்சர்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளதால் தூங்கிக் கொண்டிருக்கின்றன. 

புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி கொலை செய்யப்பட்டது பற்றி, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடுகள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் பத்து கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் அவர்களே, தலைமை நீதிபதி திரு கவுல் அவர் களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், அறிவியல் வளர்ச்சி இவ்வளவு முன் னேறி வளர்ந்துள்ள நிலையில், அதை முழுமை யாகப் பயன்படுத்தி பொதுமக்களுக்கான பாது காப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யாதது ஏன், தேவையான உபகரணங்களுடன் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் நவீன கட்டுப்பாட்டு அறையை அமைக்க மத்திய மாநில அரசுகள் போதிய நிதியை ஏன் ஒதுக்க வில்லை, இதுவரை எத்தனை இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்பது உட்பட பத்து கேள்விகளை எழுப்பியிருக் கிறார். தலைமை நீதிபதி அவர்கள், அந்தக் கடிதத்தையே வழக்கு மனுவாகப் பதிவு செய்து, தலைமை நீதிபதி கவுல் அவர்களும், நீதி பதி மகாதேவன் அவர் களும் விசாரித்து, இந்தப் பத்து கேள்வி களுக்கு மத்திய மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசா ரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நீதிபதிகள் ஏற்கனவே கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் மேலும் அவகாசம் கேட்கிறீர்கள், இன்னும் ஆறு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபரா தத்துடன் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். 

வேளாண்மைத் துறை உயர் அதிகாரி முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாரே, அதற்கு யார் காரணம்?
காவல் துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டாரே? அதற்கு யார் காரணம்?
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு என்ன நடவடிக்கை? 

பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலே அடைக்கப் பட்டாரே, அது போலக் கருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதித்ததுதான் இந்த ஆட்சியினரின் அளப்பரிய சாதனையா?
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற முக்கிய கொலைகளை மட்டும் பட்டியலிட் டால் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட வெங்கட ரமணன் மேற்கு சைதாப்பேட்டை யில் கொலை - திருப்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவி பூரணி கழுத்தை அறுத்துக் கொலை - அரியலூர் அருகே வி.சி. நிர்வாகி முத்துக்கிருஷ்ணன் அடித்துக் கொலை - ராஜபாளையம் அருகே கோயிலில் வாலிபர் ராஜசேகர் படுகொலை - அவிநாசியில் மாணவி கொலை - சாத்தூர் அருகே விறகு வியாபாரி வெட்டிக் கொலை - பவானி அருகே முதியவர் அடித்துக் கொலை - சோழவரத்தில் பூட்டிய வீட்டில் இளம்பெண் கற்பழித்துக் கொலை - வேலுhர் அருகே தமிழ்வாணன் கொலை - போரூர் அருகே பெண் கொலை - காஞ்சிபுரம் அருகே தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல்ரகுமான் வெட்டிக் கொலை - வியாசர்பாடியில் கல்லூரி மாணவன் சீனிவாசன் வெட்டிக் கொலை - செவ்வாப்பேட்டை அருகே வாலிபர் அடித்துக் கொலை - திருத்தணி அருகே விவசாயி சண்முகம் படுகொலை - சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவன நிர்வாகி வெங்கடேஸ்வரலு வெட்டிக் கொலை - ஆவடியில் குடிபோதை தகராறில் வாலிபர் குத்திக் கொலை - தேவகோட்டை அருகே ப்ளஸ் 2 மாணவி ஷாலினி கொலை - எழும்பூர் அருகே பெயிண்டர் ஓட ஒட விரட்டிக் கொலை - செங்கல் பட்டில் தொழிலாளி கோபி குத்திக் கொலை - திருவண்ணாமலை அருகே இளம் பெண் கற்பழித் துக் கொலை - புதுக்கோட்டை மாவட்டத்தில் 10வது வகுப்பு மாணவன் அடித்துக் கொலை - பாபனாசம் அருகே வாலிபர் அசோக் கொலை - கும்மிடிப்பூண்டி அருகே ப்ளஸ் 2 மாணவி ரோசம்மாள் கொலை - பெரம்பூர் அருகே பெயிண்டர் அசோகன் அடித்துக் கொலை - மீஞ்சூரில் நள்ளிரவில் சென்னை வாலிபர் அடித்துக் கொலை - கும்மிடிப்பூண்டி அருகே இளம் பெண் கடத்திக் கொலை - நாமக்கல்லில் ஆசிரியர் பயிற்சி மாணவி கொலை - கும்முடிப் பூண்டி அருகே பெண் கொலை - மதுரை திருமங்கலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ரெங்கசாமி வெட்டிக் கொலை - சிவகங்கையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை - சிவகங்கை அருகே முன்னாள் ராணுவ வீரர், மனைவியுடன் படுகொலை - வேலூர் மாவட்டத் தில் மூன்று பேர் கொலை - மெரினா கடற்கரையில் வாலிபர் அடித்துக் கொலை - தாம்பரம் அருகே மெக்கானிக் வெட்டிக் கொலை - ஆலங்குளம் அருகே 3 பேர் கொலை - மதுரை அருகே செவி லியர் கல்லூரி மாணவி சரண்யா பாலியல் பலாத் காரம் செய்து கொலை - சேலம் அருகே கணவன், மனைவி வெட்டிக் கொலை - பணப்பாக்கம் அருகே வாலிபர் கொலை - சிவகங்கையில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை - நாகையில் அ.தி.மு.க. - வி.சி. கட்சியினர் மோதல் - வாலிபர் அடித்துக் கொலை - சங்கரன்கோவில் அருகே கார் டிரைவர் ஜெகதீஷ் கொலை - சிவகங்கையில் அ.தி.மு.க. வில் சீட் கேட்ட கவுன்சிலர் மற்றும் மகன் கொலை - ஊட்டி டாக்சி டிரைவர் கோவை யில் கொலை - வேலூரில் மூதாட்டி கொலை தூத்துக்குடி அருகே 2 பேர் குண்டு வீசிக் கொலை - கும்மிடிப்பூண்டியில் லாரி டிரைவர் வெட்டிக் கொலை - பேரணாம்பட்டில் நர்சிங் கல்லுhரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை - கும்பகோணம் அருகே மாணவன் கொடூரக் கொலை - தஞ்சையில் நகைக் கடை காவலாளி கொலை - கிருஷ்ணகிரி லாரி டிரைவர் கொலை - உத்தமபாளையத்தில் பா.ஜ. செயலாளர் வெட்டிக் கொலை -போரூர் அருகே அடுக்கு மாடி குடியிருப் பில் இளம்பெண் படுகொலை - வளசர வாக்கத் தில் கழுத்து அறுத்து பெண் கொலை - மதுரை யில் அ.தி.மு.க. கவுன்சிலர் விஜயராகவன் வெட் டிக் கொலை - கரூர் அருகே கலப்புத் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை - ராசிபுரம் அருகே கவுன்சிலர் சிவக்குமார், தந்தை பெரி யண்ணன் வெட்டிக் கொலை - மேட்டூர் அருகே தி.மு.க. கவுன்சிலர் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை - கும்முடிப்பூண்டி அருகே பூசாரி வெட்டிக் கொலை- வேப்பூர் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி கொலை - மண்ணடியில் இளம் பெண் வினோதினி கொலை - மானாமதுரையில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை - குரோம்பேட் டையில் கொத்தனார் அடித்துக் கொலை - ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பொள்ளாச்சியில் வெட்டிக் கொலை - தாம்பரம் அருகே திருநங்கை குத்திக் கொலை - செங்குன்றத்தில் கல்லூரி மாணவியின் காதலன் குத்திக் கொலை. - மயிலாடுதுறை அருகே ஜவுளி வியாபாரி சரவணன் கொலை - மதுரையில் பெண் எரித்துக் கொலை - திருச்சுழியில் தி.மு.க. ஒன்றியப் பொருளாளர் படுகொலை. - சென்னை பெரியமேட்டில் நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை - பெரிய மேடு காவல் நிலையம் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வெட்டிக் கொலை - அரியலூர் அருகே தமிழர் நீதிக் கட்சி நிர்வாகி முருகேசன் கொலை வடபழனியில் வங்கி ஊழியர் நாகேஸ்வர ராஜ் படுகொலை - குமரி மாவட்டத்தில் ஸ்ரீகுமார், சசிக்குமார் வெட்டிக் கொலை - குரோம் பேட்டையில் பட்டப்பகலில் கிருஷ்ணவேணி என்ற பெண் கொலை - புழலில் வழக்கறிஞர் அகில் நாத் வெட்டிக் கொலை - கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு குத்திக் கொலை - வியாசர்பாடியில் வழக்கறிஞர் தி.ரவி வெட்டிப் படுகொலை - சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக்கொலை - சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று அதிகாலை பெண் என்ஜினியர் சுவாதி கொலை - கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை - நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன காவலாளி கொலை - பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை - அரூர் அருகே விவசாயி குள்ளப்பன் சுட்டுக் கொலை - தூத்துக்குடி அருகே நகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை - நாங்குனேரி அருகே கல்லுhரி மாணவர் வெட்டிக் கொலை - நெல்லை, கிருஷ்ண கிரி, நெய்வேலியில் பயங்கரம் - தி.மு.க. நிர்வாகி உட்பட 3 பேர் கொலை - ராசிபுரம் அருகே தம்பதிகள் படுகொலை - குளித்தலை அருகே மஞ்சுளா என்ற பெண் படுகொலை - நெல்லை அரசு அலுவலகத்தில் பெண் ஊழியர் படுகொலை - பட்டுக்கோட்டை நகரக் கழகப் பொறுப்பாளர், தங்க மனோகரன் வெட்டிக் கொலை - சிங்கா நல்லுhரில் 2 பேர் கொலை - சம்பள பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையனுடன் தைரியமாக போராடிய பள்ளி ஆசிரியை தள்ளி விட்டுக் கொலை - புதுக்கோட்டை, கீரமங்கலத் தில் இளம்பெண் யமுனா அடித்துக் கொலை - திருச்சியில் பிரவீன் சுந்தர் ரயிலில் தள்ளிக் கொலை - தூத்துக்குடியில் 2 பெண்கள் படு கொலை - லால்குடி அருகே மின்துறை அதிகாரி கொலை - மணலியில் அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை ஞானசேகரன் வெட்டிக் கொலை - மானாமதுரை அருகே கழுத்தை அறுத்து சிறுமி கொடூரக் கொலை - நெல்லை அருகே ஓடும் பேருந்தில் அண்ணன் தம்பி வெட்டிக் கொலை - அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. பேரூராட்சித் துணைத் தலைவர் வெட்டிப் படுகொலை - நாமக்கல்லில் பள்ளி மாணவி காவியா கழுத்தை நெரித்துக் கொலை - வலங்கைமானில் சின்னப்பா, பைனான்ஸ் அதிபர் வெட்டிக் கொலை - நெகமத் தில் தொழிலாளி படுகொலை - திருவெண்ணெய் நல்லூர் அருகே பழி வாங்க பள்ளி மாணவி கொலை - சிவகாசியில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை - தர்மபுரி அருகே நடுரோட்டில் விவசாயி படுகொலை - சோளிங்கர் அருகே காவல் நிலையம் எதிரே விவசாயி கத்தியால் குத்திப் படுகொலை - பொள்ளாச்சி அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை - மாமல்லபுரம் அருகே கழுத்து அறுத்து பெண் படுகொலை - ராணிப் பேட்டையில் பைனான்ஸ் அதிபர் வசந்தி வெட்டிக் கொலை - சேரன்மகாதேவியில் அரசு ஊழியர் வெட்டிக் கொலை - திருவள்ளூர் அருகே சென்னை வாலிபர் ஜெயசீலன் வெட்டிக் கொலை என்று பட்டியல் நீண்டு கொண்டேபோகும். 

எதிர்க்கட்சிகளும், அதன் தலைவர்களும் இந்த ஆட்சியில் எப்படியெல்லாம் அல்லலுக்கு ஆளாகி றார்கள் தெரியுமா? பிரதமர், முதல் அமைச்சர் சந்திப்பு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏதோ பேசியதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் போராட்டம். அவருடைய வீடு முற்றுகையிடப்பட்டது. மதுரை யிலே அவரை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம். ஏன், தே.மு.தி.க. தலைவர், ஜெயலலி தாவின் பேனர் ஒன்றை எடுக்கச் சொன்னாரென்று அ.தி.மு.க. வினர் ஒரு போராட்டம். பத்திரிகையாளர்களைத் தூண்டி விட்டு அவர்கள் போராட்டம். தி.மு. கழகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களே, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் தாக்கப்படும் கொடுமை எவ்வளவு?

அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீதும், ஏடுகள் மீதும் எத்தனை அவதூறு வழக்குகள்? """"ஆனந்த விகடன்"" இதழில் வந்த செய்தியை அப்படியே எடுத்து கேள்வி பதில் பகுதியில் நான் வெளியிட்டதற்காக என் மீது அவதூறு வழக்கு! 

அவதூறு வழக்கு ஒன்றில் உச்சநீதி மன்ற நீதியரசர் தீபக் மிஸ்ரா கூறும்போது """"முதலமைச் சரை ஊழல்வாதி என்று குறிப்பிடுவதே அவதூறு என்றால், எதிர்க் கட்சிகள் எதையுமே விமர்சிக்க முடியாதே"" என்று வினவியிருந்தார். 

இப்போது மட்டுமல்ல; 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த ஐந்தாண்டு காலத்தில் 180 அவதுhறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது தொடுத்தார். தற்போது 2011 முதல் 2015ஆம் ஆண்டு முடிய உள்ள ஐந்தாண்டு களில் 213 அவதூறு வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. 

"சென்னையில் தொடர்கிறது வழிப்பறி, திருட்டு, வீடு உடைப்பு" என்ற தலைப்பில் "தினமலர்" நாளேடு சில நாட்களுக்கு முன்பு "கொட்டை எழுத்துக்களில்"" செய்தி வெளியிட்டிருந்தது எதைக் காட்டுகிறது? அ.தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாப்பதில் காட்டுகின்ற இலட்ச ணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. "தினமலர்"" நாளேடு மட்டுமே இப்படிப்பட்ட செய்தி களை வெளியிட்டுள்ளது? அநேகமாக ஆங்கில நாளேடுகள், வார இதழ்கள் அனைத்திலும் இப்படிப் பட்ட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின் றன. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் துறை வேறு அமைச்சரின் பொறுப்பிலே இருந்திருந்தால் இந்நேரம் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். ஆனால் முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை அல்லவா அது; யாரைப் பழி வாங்க முடியும்? 

13-5-2016 அன்று அதாவது தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் குறித்து, சி.பி.ஐ. விசாரித்து எவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் நீதி மன்றத்திற்கு அறிக்கை தர வேண்டுமென்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

கடந்த 24-4-2016 அன்று "தினமலர்" நாளிதழின் முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? "வாக்காளர்களுக்குக் கொடுப்பதற் காகப் பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் - 45 இடங்களில் சோதனை"" என்பதுதான்! அந்தத் தலைப்பின்கீழ் வந்த செய்தியில்,"கரூரில், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக் கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரி கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை யில் 10.30 இலட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப் பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது. கரூரில் அன்பு நாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற் றில், இது வரை இல்லாத அளவு பணம் என்று கூறப் பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, """"அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்"" எனத் தகவல்கள் கிடைத்தன"" என்று "தினமலர்"" செய்தி வெளியிட்டது. 
அதே இதழில் வெளிவந்த மற்றொரு செய்தியில், """"தமிழகம் முழுவதும் பணம் பதுக்கி வைக்கப் பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, """"கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென் னையில் ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத் தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பணம் கொண்டு வந்து இறக்கப் பட்ட காட்சிகள், பதிவாகி இருப்ப தாகக் கூறப்படுகிறது. இந்தக் காமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாக வும், தகவல் வெளியாகியுள்ளது"" என்று தெரிவித்திருக் கிறார்கள்.

இந்தத் தகவல்கள் "தினமலர்" நாளிதழில் வந்ததைப் போலவே, வேறு பல நாளேடுகளிலும் வந்துள்ளன. இந்தத் தகவல் கள் வருமான வரித் துறை அதி காரிகளும், தேர்தல் அதிகாரிகளும் கூறியதாக உள்ளன. செய்திகள் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், தமிழக அரசின் சார்பில் இதற்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை? 

அன்புநாதன் மூலமாக இரண்டு முக்கிய அமைச் சர்கள் தங்களது லஞ்ச, ஊழல் பணங்களை பல இடங்களுக்கு அனுப்பினார்கள் என்றும், ஊரின் பெயரை தன் பெய ருக்கு முன்னாள் வைத் துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவே வைத்திருப்பதாகவும், அமைச்சரின் """"பாஸ்போர்ட்டை"" சோதனையிட்டாலே அவர் பயணம் செய்த விவரத்தை அறியலாம் என்றும், நடிகைகள் பற்றியும் பக்கம் பக்கமாக வந்த செய்திகள் இன்று வரை அமைச்சர்களாலோ, முதல்வராலோ மறுக்கப்படவில்லையே; ஏன்? தமிழகத்தில் இது ஒரு சம்பவம் மட்டுமா? கரூரில் நத்தம் விசுவநாதன் நண்பர் வீட்டில் இந்தச் சோதனை என்றால், அதற்கு மறுநாளே சென் னையில் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நண்பர் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும், ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வரவில்லையா? தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர் இவர் என்றும், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்ததே, இது உண்மையா இல்லையா? இவ்வளவு தானா?
தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறதே, எந்தத் தேர்தலிலாவது இந்த முறை போல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? ஐந்து மாநிலங்களில் மொத்தம் 133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக் கிறது. 

சிறுதாவூர் அரண்மனையில் இருந்த கண்டெய்னர் கள் பற்றி கடந்த மாதமே எல்லா ஏடுகளிலும் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பிய தாகவும், அதன்படி கண்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப் போடு உண்மையை மூடிப் புதைத்து விட்டார்கள். மாவட்ட ஆட்சி யரோ, காவல் துறை கண்காணிப்பாளரோ சோதனை யிடவே செல்லவில்லை என்பதுதான் பிறகு வெளிச் சத்திற்கு வந்த செய்தி.
இந்த ஒரு மாதக் காலத்தில்தான் எத்தனை கொள்ளைகள்? 

மாஜி டி.ஐ.ஜி. மனைவியிடம் திருட்டு - குன்றத்தூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் பறிப்பு - பெரம்பலூர் அருகே இன்று வீடு புகுந்து 35 பவுன், 2 லட்சம் ரூபாய் கொள்ளை. - தாம்பரம் அருகே பெண் டாக்டர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை. - கடலூரில் வீடு புகுந்து 33 லட்சம் ரூபாய் கொள்ளை - எஸ்.ஐ. மனைவியிடம் செயின் பறிப்பு - ஆவடி அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - கோவையில் வனத்துறை அதிகாரி மனைவியை கட்டிப் போட்டு கொள்ளை - நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக் கடையில் நகை கொள்ளை - சென்னை பெண் நீதிபதி வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை - காவல் நிலையம் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து 70 சவரன் கொள்ளை - போலீஸ்காரர் மனைவியிடம் செயின் பறிப்பு - அம்பையில் நகைக் கடையில் பத்து கிலோ தங்கம் கொள்ளை - மதுரையில் தம்பதியைக் கட்டிப் போட்டு காதை அறுத்து வைரத் தோடு பறிப்பு - சேலம் அருகே நகை அடகு நிறுவனத்தில் 714 பவுன் கொள்ளை -ஆத்தூர் அருகே நிதி நிறுவனத்தில் 55 கிலோ நகை கொள்ளை - மாநகராட்சி அதிகாரி போல நடந்து 45 சவரன் கொள்ளை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு ஏன்? நேற்றைய செய்தி என்ன? திருவொற்றியூரில் உள்ள பிரபல கோயில் கதவை உடைத்து 6 பஞ்ச லோக சிலைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
அது போலவே திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர நகர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குபேர பெருமாள் கோயில் பூட்டை உடைத்து, மூலவர் கையில் இருந்த நகைகள், வெள்ளி கிரீடம் போன்றவற்றையும் உண்டியலை உடைத்து அதிலே உள்ள பணத் தையும் கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறார்கள். 

திரைப்படங்களில்தான் நாம் கண்டிருப்போம். ஓடும் ரெயிலில் கொள்ளை அடிப்பதை; ஆனால் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியில் சேலத் திலிருந்து புறப்பட்டு சென்னை வந்த ரெயிலில் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 80 இலட்ச ரூபாயை இரவோடு இரவாகக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமும் நடைபெற்ற பெருமையும் இந்த ஆட்சிக்குத்தான் உண்டு. இந்த கொள்ளைகளை யும், கொலைகளையும் கண்டுபிடிக்காத காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டோ இல்லையோ, சென்னையில் தலைமைச் செயலகத் தில் போராட்டம் நடத்திய தி.மு. கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரி உடனடியாக ஒரே நாளில் ராமனாதபுரம் கடலோரக் காவல் படைக்கு மாற்றப் பட்ட நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. இவைதான் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படும் இலட்சணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here