காலை செய்திகள் 08/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் 08/09/2016

    
🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍

📡📡📡📡📡📡📡📡📡📡📡

🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

🌍தங்கம் சவரனுக்கு 280 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 280 உயர்ந்தது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தங்கம் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிகப்படியாக விலை உயர்வதும், பின்பு சிறிது இறங்குவதுமாகவும் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 2,947க்கும், ஒரு சவரன் 23,576க்கும் விற்கப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 35 அதிகரித்து ஒரு கிராம் 2,982க்கும், சவரனுக்கு 280 அதிகரித்து ஒரு சவரன் 23,856க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 280 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

🌍பெண்கள் விடுதி குளியறையில் ரகசிய கேமரா: ஆபாச படமெடுத்து மிரட்டி வந்த போலி சிபிஐ அதிகாரி

சென்னை திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான தாமோதரன். இவர், வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது.

தாமோதரன், பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு பெண்கள் விடுதி நிர்வாகி தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவான்மியூர் போலீசார், தாமோதரனிடம் விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் அவர், தான் சி.பி.ஐ.யில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாக கூறினார். விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார் சிபிஐ அதிகாரி என கூறியதால் முதலில் பின்வாங்கினர். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தாமோதரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் தீவிரமாக நடத்திய விசாரணையில் தாமோதரன் போலி சி.பி.ஐ. அதிகாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தாமோதரன் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தினர். சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், வக்கீல், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என 3 போலியான அடையாள அட்டைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகள், அவர் பயன்படுத்திய சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார், காவல்துறையின் இரண்டு சீருடைகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரது செல்போனில் விடுதியில் பெண்கள் குளிக்கும் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்து அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

🌍8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை கலெக்டராக பி. மகேஸ்வரி நியமனம்

சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🌍மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் பலி

சென்னை: மதுராந்தகம் அருகே சூனாம்பேட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ராஜு, கல்யாண சுந்தரம் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 

🌍பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆகாது -அருண்ஜெட்லி

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆகாது -அருண்ஜெட்லி

டெல்லியில் இந்திய பொருளாதார நிபுணர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசும்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி, ''பொதுத்துறை வங்கிகள் சிலவற்றின் நிலையை வலுப்படுத்துவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இல்லையென்றால் தனியார் வங்கிகளின் போட்டி நிறைந்த இன்றைய சூழலில் அவை தாக்குப்பிடிப்பது மிகவும் கடினமாகிவிடும். என்றபோதிலும் மற்ற பொதுத்துறை வங்கிகள் அனைத்தின் செயல்பாடுகளும் தற்போதைய நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும். பொதுத்துறை வங்கிகளை அவற்றின் முக்கியத்துவம் கருதி தனியார் மயமாக்குவதற்கு இந்தியா தயாராக இல்லை.

அதேநேரம் பொதுத்துறை வங்கிகள் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை இந்தியா உணர்ந்தே இருக்கிறது என்று கருதுகிறேன். ஆனாலும், ஒரேயொரு பொதுத்துறை வங்கியான, இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் அரசின் பங்குகளை மட்டும் 49 சதவீதமாக குறைப்பதற்கு சிந்தித்து வருகிறோம்''என்று கூறினார்.

🌍காவிரி விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : எதிர்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா

மதுரை: கர்நாடகத்தின் தற்போதைய நிலை தெரியாமல் உச்சநீதிமன்றம் திறக்க உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக மேலவை எதிர்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா மதுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்க முடியவில்லை என்று தெரிவித்த அவர், பற்றாக்குறை நிலவுவதால் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடப்பதாக அவர் தெரிவித்தார்

🌍கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் 3-வது நாளாக நிறுத்தம்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் 3-வது நாளாக நிறுத்தப்பட்டன.

🌍TNPSC: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தாள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும்.

இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள
5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
32 வயதுக்குள்ளும்,

பிற வகுப்பைச் சேர்ந்தோர்
30 வயதுக்குள்ளும்
இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி அவசியம்:

குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும்.

அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வானது நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும்.

தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
(செப். 8).

மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும்.

இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

🌍டெல்லி ரயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெண்கள் ஆர்பாட்டம்

டெல்லி ரயில் நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபுக்கு ரயிலில் சென்ற போது கெஜ்ரிவாலுக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டனர்.

🌍குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி சென்னையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

🌍4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் வானிலை மைய இயக்குனர் பேட்டி

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

🌍போலீஸ் நிலையத்தில் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் தங்களது இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.மனு விவரம்

‘யூத் பார் அசோசியேஷன் ஆப் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.), பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அந்தந்த மாநிலங்களின் காவல் துறை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை என்பது பொதுவான ஆவணமாகும். ஆனால் குற்றங்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு காவல் நிலையங்களில் இருந்து முதல் தகவல் அறிக்கையை பெறுவது எப்போதும் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.இணையதளத்தில் வெளியிட வேண்டும்

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளத்தில் அதை வெளியிட வேண்டும். பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முதல் தகவல் அறிக்கையை 72 மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்யலாம். பயங்கரவாதம், கிளர்ச்சி, பாலியல் வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளுக்கு இந்த தீர்ப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.பழைய தீர்ப்புகள் கடந்த ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட்டு, உத்தரபிரதேச மாநில அரசு, அந்த மாநிலத்தின் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இமாச்சல பிரதேச ஐகோர்ட்டும் அந்த மாநிலத்தின் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2010-ம் ஆண்டில் டெல்லி ஐகோர்ட்டும் இதே போன்ற தீர்ப்பை வழங்கியது.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில் அதிரடி தீர்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🌍இன்று விண்ணில் பாய்கிறது 'இன்சாட்- 3டி.ஆர்.,'

வானிலை ஆய்வுக்காக, ஜி.எஸ்.எல்.வி., - எப்05 ராக்கெட் மூலம், இன்சாட் - 3டி.ஆர்., செயற்கைக்கோளை செலுத்துவதற்கான, 29 மணி நேர கவுன்ட் டவுனை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு துவக்கியது.

வானிலை ஆராய்ச்சிக்காக, இன்சாட் - 3டி.ஆர்., என்ற செயற்கைக்கோளை செலுத்த, இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அதன்படி, ஆந்திராவின், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இன்று(செப்.,8) மாலை, 4:10 மணிக்கு, இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., - எப்05 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இதற்கான, 29 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று காலை, 11:10 மணிக்கு துவங்கியது. வானிலை ஆராய்ச்சியில் மேம்படுத்தப்பட்ட தகவல்களை இந்த செயற்கைக்கோள் அளிக்கும்.

🌍ஐபோன்7 32 ஜி.பி போன், அமெரிக்க டாலரின்படி இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,000.00. ஆனால் இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது சுமார் 70,000 ரூபாயை நெருங்கும்.

🌍திண்டிவனம் காமாட்சி அம்மன் நகைகடை உரிமையாளர் இளங்கோ என்ரபவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள 75 சவரன் நகை 1லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்

🌍மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி டிராபிக் போலீஸ் வழிமறித்தால் செல்போனை காட்டினால் போதும்

புதுடெல்லி: டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் கேட்டு டிராபிக் போலீஸ் வழிமறித்தால் இனி மொபைல் போனை காட்டிவிட்டு செல்ல வசதியாக மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அடிக்கடி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகம் எடுத்துச் செல்லாதவர்கள் சிக்கித் தவிப்பார்கள். இதனால் அபராதம் மற்றும் இன்னும் பிற அவஸ்தைகளை அவர்கள் அனுபவித்து வந்தனர். தற்போது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்கும் வகையில் மத்தியஅரசின் ஆப்சில் புதியவசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. டிஜிலாக்கர்(DigiLocker) என்ற என்ற ஆப்சில் டிரைவிங் லைசென்சை இணைக்கும் நிகழ்ச்சி சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்தது.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

இந்த ஆப்சில் நாடு முழுவதும் உள்ள 19.5 கோடி வாகனங்களின் ஆர்சி எண் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு 10 கோடி டிரைவிங் லைசென்ஸ்களும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொருவரும் இந்த ஆப்சை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போக்குவரத்து போலீசார் வழிமறிக்கும் போது ஆப்சை காட்டி அதில் உள்ள நமது லைசென்ஸ் மற்றும் ஆர்சி எண்ணை காட்டிவிட்டு செல்லலாம். இதுபற்றி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாவது: டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு ஆவணங்கள் அனைத்தும் டிஜிலாக்கர் ஆப்ஸ் மூலம் உங்கள் மொபைலில் காணலாம். இதை போக்குவரத்து போலீஸ், சட்ட அமலாக்க அதிகாரிகள் சோதனையின் போது காண்பிக்கலாம். உங்களை எந்த இடத்திலும் யாராவது தடுத்து நிறுத்தினால் அவர்களிடம் உங்கள் டிரைவிங் லைசென்சை உங்கள் மொபைல் மூலம் காண்பித்துவிட்டு செல்லலாம்.

ஊழலை ஒழிப்பதற்கு மட்டும் இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆன்லைனில் லைசென்ஸ் வழங்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ''டிஜிலாக்கர் மொபைல் ஆப்சை இதுவரை 21 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் வாக்காளர் அடையாள அட்டையை கூட பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.

🌍லோக்சபா நெறிகள் குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்

லோக்சபா நெறிகள் குழு தலைவராக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபா எம்.பி.,க்கள் மீது கூறப்படும் நன்னடத்தை தொடர்பான புகார்களை நெறிகள் லோக்சபா நெறிகள் குழு விசாரிக்கும். இக்குழுவின் தலைவராக, கடந்த இரு ஆண்டுகளுக்கு இருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இக்குழுவின் தலைவராக அத்வானியை லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார்.

திரிணாமுல் காங்., கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.,க்கள் லஞ்சப்பணம் பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தை லோக்சபா நெறிகள் குழு தற்போது விசாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

🌍பிரிவினைவாதிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் இந்தியாவின் இறையாண்மையை காப்பது மிக அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

🌍சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகினர்.

🌍ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🌍டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாள். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கட்டணத்தை செலுத்த முடியாததால் விண்ணப்பதாரர்கள் குழம்பி போயுள்ளனர்.

🌍சென்னை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🌍உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீற முடியாது எனக்கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட மாநில முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ,தாமாகவே சிறைக்கு சென்று அமர்ந்து கொள்ள வேண்டும் என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாத், சித்தராமையாவிற்கு கடிதம் எழுதி அனுப்பிஉள்ளார்.

🌍 'கார்டியன்' எனப்படும் ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விரைவில் விற்பனை செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. 22 ஆளில்லா விமானங்களை வாங்க ஏற்கனவே அமெரிக்காவிடம் விருப்பம் தெரிவித்திருந்தது இந்தியக் கடற்படை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவதற்குள்ளாகவே இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

🌍சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், 'மெகா' மரக்கன்றுகள் நடும் முகாம், ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியில் நடந்தது.

🌍ஐ.நா., அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்த சாசனம் சம்ஸ்கிருத மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

🌍இன்று விண்ணில் பாய்கிறது இன்சாட்- 3டி.ஆர்

🌍காஷ்மீர் சென்ற அனைத்துக் கட்சி கூட்டத்தால் எந்த பலனும் ஏற்படவில்லை என அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டினார்.

🌍ஜனாதிபதி மாளிகையிலுள்ள புத்தகங்களை படிக்க 15 ஆண்டுகள் போதாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

🌍சிறுகோள்கள் பற்றி ஆராய அமெரிக்க விண்வௌி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலம் ஒன்றை இன்று(செப்.,8) விண்ணில் ஏவுகிறது.

🌍மஹாராஷ்டிரா மாநிலத்தில், விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🌍முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.89.14 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 3 கிரானைட் நிறுவனங்கள் மீது மேலூர் கோர்ட்டில் 3 ஆயிரத்து 860 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

🌍திருவண்ணாமலை--நட்சத்திர ஓட்டல் கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து 2 பேர் பலி

🌍திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமம் உள்ளது. இங்கு பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். நேற்று காலை அந்த வழியாக வந்த ஒரு தரப்பினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், முத்தரையர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீரம்பூர்-வேங்கடத்தானூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

🌍நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகம் முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்தினர்.

🌍சிறைக்குள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய சமூக ஆர்வலர் பியூசுக்கு, சிறைத்துறை டிஐஜி மெயில் அனுப்பியுள்ளார். அதில், நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுக்களின் நகல்களை கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

🌍ஆசியான், கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோ டி

🌍கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் சமீபத்தில் நடந்த மூன்று மாநில காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்கு பிறகு வன விலங்குகளை கொன்று மதுவுடன் கூடிய விருந்து நடத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் மீது சாம்ராஜ்நகர் கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்

🌍நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தலைவராக பாஜ மூத்த தலைவர் அத்வானியை நியமனம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

🌍உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பட்டியலில் தற்போது இலகு ரக ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனையை ஹெச்.ஏ.எல். வெற்றிகரமாக நடத்தியது.

🌍போகிமான் விளையாட்டை இந்தியாவில் தடை செய்யக் கேட்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நாச்சிகெத் தேவ் என்பவர் பொதுநலன் கருதி ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

🌍உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகாணும் வகையில் காவல்துறையில் ட்விட்டர் புகார் சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

🌍சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

🌍உலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

🌍உ.பி.,யில், கடனை திரும்ப செலுத்துவதற்காக, ஐந்து மாத குழந்தையை விற்ற பெற்றோர் மற்றும் அதை விலைக்கு வாங்கிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

🌍கர்நாடகாவில், துங்கபத்ரா ஆற்றில், விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற, 12 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

🌍கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டதால், தமிழக அரசு பஸ்கள் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டன.

🌍பாகிஸ்தானில், இந்திய துாதர் அவமதிக்கப்பட்டது குறித்து, விளக்கம் கேட்டு, இந்தியாவுக்கான பாக்., துாதருக்கு, மத்திய அரசு, 'சம்மன்' அனுப்பியுள்ளது.

🌍டில்லி மாநில அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு, துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளது அர்த்தமற்றது. நாங்கள், அரசின் முழு ஒப்புதலுடன் தான் வெளிநாடு செல்கிறோம். தனிப்பட்ட பயணங்களுக்கு, எங்கள் சொந்த பணத்தை மட்டுமே செலவழிக்கிறோம்--சத்தியேந்தர் ஜெயின், டில்லி மாநில அமைச்சர், ஆம் ஆத்மி.   

🌍டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் கேட்டு டிராபிக் போலீஸ் வழிமறித்தால் இனி மொபைல் போனை காட்டிவிட்டு செல்ல வசதியாக மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🌍பல்வேறு உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களில் புதிதாக 25 நீதிபதிகள் இந்த வார இறுதியில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

🌍ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

🌍அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு வரை இயங்கும் பேசஞ்சர் ரயில் வரும் 12ம் தேதி முதல் ஒயில்பீல்டு ரயில் நிலையத்திற்கு வரும் நேரம் ஒரு மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

🌍பி.எஸ்.எப்., எனப்படும் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் உதவி கமாண்டன்ட் பதவிக்கான தேர்வில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர் நபீல் அகமது வானி இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்

🌍தமிழகத்தில் ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்வது வேதனை அளிக்கிறது. சினிமாவால் இந்த சிக்கலை சரி செய்ய முடியும் என இயக்குநர் வசந்தபாலன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

🌍அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ

http://www.sisivakasiteacherkaruppasamy.blogspot.com

🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here