🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
🔵🔴🔵🔴🔵🔴🔵🔵🔴🔵🔴
🔵செப்., 20ம் வரை காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு
புதுடில்லி: காவிரியில் தினமும் தமிழகத்துக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
🔴ஜம்முவில் மற்றொரு தீவிரவாதியின் உடல் கண்டெடுப்பு
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு தீவிரவாதியின் உடல் இன்று காலை கண்டெக்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள், ஒரு காவலர் என நால்வர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பூஞ்ச் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மற்றொரு தீவிரவாதியின் உடல் கண்டெக்கப்பட்டுள்ளது.
🔵கிருஷ்ணகிரியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகள் விற்பனை அமோகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சசி அடைந்துள்ளனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆட்டு சந்தைகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது. இந்த பகுதிகளில் விற்கப்படும் ஆடுகளை வாங்க வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் குவிந்து வருவதால் ஆடுகளின் விலையும் அதிகரித்து உள்ளது.
இதனால் 5,000 ரூபாய்க்கு விலைபோன ஆடுகள் 10,000 ரூபாய் வரை விலை போகின்றன. விலை பலமடங்கு உயர்ந்து இருக்கும் நிலையிலும் வியாபாரம் அதிக அளவில் நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
🔴காவிரி விவகாரம்: புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது- கர்நாடகா வங்கி முற்றுகை!
புதுச்சேரி: காவிரியில் உரிய நீரை திறந்துவிடாத கர்நாடகா அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. புதுச்சேரியில் கர்நாடகா அரசு வங்கியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
🔵10,000 தற்காலிக ஊழியர்களை பணியமர்த்த பிளிப்கார்ட் திட்டம்
விழாக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சேவைகளை மேம்படுத்த 10,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தபிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
🔴அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார் வாவ்ரிங்கா
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சுவிட்சர்லாந்து வீரரான வாவ்ரிங்கா வென்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நியூயார்க்கில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச்சை, மூன்றாம் நிலை வீரரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா வீழ்த்தினார். ஜோகாவிச்சை 6-7 (1-7), 6-4, 7-5, 6-3 என்ற நேர் சட்களில் வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.
🔵சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,965-க்கும், ஒரு சவரன் ரூ.23,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.48.90-க்கும், கட்டி வெள்ளி (கிலோ) ரூ.45,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
🔴சாத்தான் மீது கல்லெறிய அரபாத் மலையில் குவிந்த ஹஜ் யாத்ரீகர்கள்
மெக்கா: ஹஜ் யாத்திரையின் இறுதி சடங்கான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சிக்காக யாத்ரீகர்கள் அரபாத் மலையில் குவிந்துள்ளனர்.
🔵ஐ.நா. பொதுச் செயலர் தேர்வு: குட்டெரெஸ் முன்னிலை
நியூயார்க்: ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற நான்காம் சுற்றுத் தேர்விலும் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
ஐ.நா.வின் தற்போதைய செயலர் பான் கி-மூன் பதவிக் காலம் இவ்வாண்டு இறுதியில் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
🔴தமிழக - கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்
ஓசூர் : தமிழகம் - கர்நாடகா இடையேயான அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
🔵சுமார் 10 கோடி பேர் பங்கேற்கும் ஹஜ் பயணம் துவங்கியது
மெக்கா: சௌதி அரேபியாவில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு செல்ல, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 கோடி 5 லட்சம் பேர் தங்களது புனித ஹஜ் பயணத்தை துவக்கியுள்ளனர்.
🔴காவிரி விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.. டிஜிபி, கமிஷனருடன் ஜெயலலிதா அவசர ஆலோசனை
சென்னை: காவிரி பிரச்சினையால் தமிழகத்தில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகிய உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
🔵பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்
புதுடில்லி : பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 8.8 சதவீத வட்டி வழங்க, பி.எப்., அமைப்பு முன் வந்தது; ஆனால், 8.7 சதவீதமாக அதை, நிதி அமைச்சகம் குறைத்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 8.8 சதவீத வட்டி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான, வட்டி விகிதம் குறித்து தற்போது ஆலோசனை நடக்கிறது. மற்ற சிறு சேமிப்புகளுக்கு இணையாக, பி.எப்., வட்டி விகிதமும் இருக்க வேண்டும் என, நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.அதன்படி, 'நடப்பு நிதியாண்டிற்கு, 8.6 சதவீத வட்டி வழங்கலாம்' என, பி.எப்., அமைப்பும், நிதி அமைச்சகமும் இறுதி செய்துள்ளதாக, நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
🔴விவசாய நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்ட முயற்சி: பொள்ளாச்சி அருகே மினி லாரி சிறைப்பிடிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்ற மினி லாரியை விவசாயிகள் சிறைபிடித்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஸ்ரீகோபாலபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். நள்ளிரவில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து தூர் நாற்றம் அடித்ததால் சந்தேகம் அடைந்த மக்கள் அங்கு சென்று பார்த்த பொது கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகளை அங்கு புதைக்க முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்த அவர்கள் இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
🔵கர்நாடக அரசு தாக்கல் செய்த அவசர மனு நிராகரிப்பு
புதுடெல்லி: 5-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது கர்நாடகத்தின் கோரிக்கையாகும். உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த அவசர மனு மீது விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் அவசர மனுவில் கர்நாடகம் குறிப்பிட்டிருந்த தகவல்கள் சரியானவை அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
🔴பக்ரித் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு கவர்னர், முதல்வர் தலைவர்கள் வாழ்த்து!
சென்னை:
பக்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிக கவர்னர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
🔵கொரட்டூர் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை : சென்னையை அடுத்த கொரட்டூரில் அமைந்துள்ள ஏரியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
கொரட்டூர் ஏரியில் ஸ்கைரோனமஸ் பூச்சிகளின் தொல்லை
அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்கைரோனமஸ் பூச்சிகளை அழிக்கும் வகையில், ஏரியில் 100க்கும் மேற்பட்ட வாத்துகள் விடப்பட்டுள்ளன.
🔴நடிகர் சங்க நிதி கையாடல்; சரத்குமார், ராதாரவி மீது நாசர் வழக்கு!
சென்னை: சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நாசர் மனுதாக்கல் செய்துள்ளார்.
🔵ஐபிஓ வெளியீடு ரூ.7,000 கோடி திரட்ட திட்டம்
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், மற்றும் ஜிஎன்ஏ ஆக்ஸெல்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் ஐபிஓ இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் ரூ.7,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளன.
🔴வேலூரில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு- மறியல், தடியடி
வேலூர்: வேலூரில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் வீடு மற்றும் மாவட்ட துணைத் தலைவரின் பேருந்து மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
🔵கர்நாடக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரியாக கையாளவில்லை: உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: கர்நாடக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரியாக கையாளவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
🔴கடல் வெப்பமயமாதலால் இந்தியாவில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்'
கடல்கள் வெப்பமயமாகி வருவதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
🔵மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔴தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை : வருமான வரித்துறை அதிரடி ஆரம்பம்!
சென்னை : சென்னை தமிழகத்தில் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
🔵ஜிஎஸ்டி குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த குழுவிற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களாக மாநில நிதியமைச்சர்கள் செயல்படுவர். எந்த பொருள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும் என்று குழு முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔴ராமேஸ்வரத்தில் கர்நாடக வாகனங்களின் மீது தாக்குதல்: டிரைவருக்கு அடிஉதை; 4 பேருக்கு போலீஸ் வலை
ராமேஸ்வரத்தில் கர்நாடக வாகனங்களின் மீது தாக்குதல்: டிரைவருக்கு அடிஉதை; 4 பேருக்கு போலீஸ் வலை
🔵பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழா சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பல கி.மீ. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
முறையான ஏற்பாடுகள் செய்யாததே காரணமென பக்தர்கள் குற்றச்சாட்டு
🔴சூறை காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறை காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக காட்டுப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து நாசமாகின.
சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
🔵உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது: காங்கிரஸ் விவசாயிகள் சங்கம் வரவேற்பு
திருச்சி: தமிழகத்துக்கு நீரை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது என காங்கிரஸ் விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் காங்கிரஸ் விவசாயிகள் சங்கத் தலைவர் முரளிதரன் பேட்டியளித்துள்ளார்.
🔴உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடி: பாலகிருஷ்ணன் கருத்து
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை தருவதை அரசியல் ஆக்குகிறது என பாலகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார். காவிரி தமக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் கர்நாடகா நடந்து கொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
🔵நியூ வுட்லண்ட்ஸ் ஓட்டல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள நியூ வுட்லண்ட்ஸ் ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🔴தாவூத்திடம் ரூ.40 கோடியை சுருட்டிய கூட்டாளி
புதுடில்லி: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்து ரூ.40 கோடியை அவரது கூட்டாளியே சுருட்டியுள்ளான். இது தொடர்பாக தாவூத் ஆட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔵இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஸ்டூவர்ட் பின்னி தேர்வு செய்யப்படவில்லை.
இம்மாதம் இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. முதல் டெஸ்ட் வரும் செப்., 22ல் கான்பூரில் துவங்குகிறது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கோல்கட்டா (செப்., 30 - அக்., 4), இந்துார் (அக்., 8-12) நகரங்களில் நடக்கவுள்ளன. டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு மும்பையில், தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று நடந்தது. இதில் டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பயிற்சியாளர் அனில் கும்ளே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
🔴டிசம்பரில் யுவராஜ்-ஹசல் திருமணம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த 'பில்லா' படத்தில் ''செய் ஏதாவது செய்...' எனும் பாடலில் கவர்ச்சி ஆட்டம் ஆடியவர் நடிகை ஹசல் கீச். தொடர்ந்து பாலிவுட்டில் 'பாடிகார்ட்', மேக்சிமம், போன்ற படங்களில் நடித்துள்ளார். சில தென்னிந்திய படங்களிலும் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். இந்நிலையில் இவருக்கும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கும் காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இப்போது திருமணத்தில் இணைய உள்ளனர். வருகிற டிசம்பர் முதல்வாரத்தில் யுவராஜ்சிங்- ஹசல் கீச் திருமணம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமண தேதி வெளியாகவில்லை
🔵காவேரியில் இருந்து வரும் 20ந்தேதிவரை 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
🔴முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
பிரபல வைர வியாபாரி கீர்த்திலால் வீடு மற்றும் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அதிரடி சோதனை.
🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக