இன்றைய செய்திகள் 13/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்திகள் 13/09/2016

1] *காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் திங்கட்கிழமை வன்முறையில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்*

2] *காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள கலவரங்களில் இருந்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்*

3] *ஹிலாரி கிளிண்டனுக்கு நிமோனியா என்று கண்டறியப்பட்ட நிலையில் அவர் விரைவாக குணமடைவார் என நம்புவதாக அதிபர் தேர்தலில் ஹிலாரியின் போட்டியாளரான, டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்; ஹிலாரிக்கு உடல்நிலை சரியில்லை என்று கண்டறியப்பட்டு, முதல்முறையாக டிரம்ப் இவ்வாறு வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்*

4] *சிரயாவில் அமெரிக்கா மற்றும் ரஷியாவிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இது எப்படி நீடிக்கும் என்று பல சந்தேகங்கள் இருந்த போதிலும் இந்த போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது*

5] *பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள படையினர்களுக்கு பயிற்சி அளித்துவரும் அமெரிக்கா சிறப்பு படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கூறியுள்ளார்*

6] *பாதுகாப்பு வசதிகளுக்கு அப்பாற்பட்டு, தன்னுடைய சொந்த வீட்டை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திய அரை மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அதிபர் ஜேக்கப் ஸூமா செலுத்தி இருப்பதாக தென்னாப்ரிக்க கருவூலத் துறை தெரிவித்திருக்கிறது*

7] *’என் மகனை சாதி கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்’ - மாரியப்பன் தாயார் அதிரடி* -எல்லோரையும் உறவுகளாக மனிதர்களாக பார்க்கிறேன். தயவு செய்து என் மகனை அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள் என்று பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தாயார் கூறியுள்ளார்.

8] *காவிரி விவகாரம் : கரூரில் பதுங்கி ஒளிந்த அரசியல் கட்சியினர்* -கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 15 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று  உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதையடுத்து கடந்த 7 தினங்களாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. மேலும், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் அப், பேஸ் புக்கில் பகிர்வதும் என்றும் தமிழர்களின்  கார்கள், லாரிகள், பேருந்துகள் உடைத்தெரியப்படுவதும், ஆங்காங்கே தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையில் அம்மாநில முதல்வர் சீத்தாராமையா மவுனம் காக்கிறார். கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையை கரூரில் முதல் முறையாக கரூர் மாவடியான் கோயில் தெருவில் உள்ள சிறுவர்கள் எரித்ததுடன்,  அவரின் உருவ பொம்மையை செருப்பாலும், விளக்கமாற்றாலும்  அடித்தும் தங்களது உணர்வை வெளிக்காண்பித்தனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நடத்திய இந்த உருவ பொம்மை எரிப்பு சம்பவம் உண்மை தமிழ் உணர்வையும், தமிழர்கள் என்ற உணர்வையும் வெளிக்காட்டியது. இந்த விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சியினர் மவுனம் காத்த நிலையில் சிறுவர்கள் போட்டு உடைத்த இந்த உருவ பொம்மை எரிப்பு சம்பவம் மிகுந்த வரவேற்பை தமிழர்களிடையே பெற்றுள்ளது.

9] *தொடரிக்கு யு சான்றிதழ்* -செப்டம்பர் மாதம் வெளியான குற்றமே தண்டனை, கிடாரி, இருமுகன் படங்களுக்கு யு சான்றிதழ் கிடைக்காததால் 30 சதவீத வரிச்சலுகையை இழந்தன. இது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கவலையை தந்தது. இந்நிலையில், வீர சிவாஜி படம் யு சான்றிதழ் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷின் தொடரி படமும் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

10] *வெறி கொண்டு திரியும் கன்னடர்கள்: பகை தீர்க்க துடிக்கும் தமிழர்கள்* -காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் 20ஆம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து பெங்களூரில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கன்னடர்கள் தமிழர்கள் மீதும், தமிழர்கள் கன்னடர்கள் மீதும் இனவெறியுடன் தாக்கல் நடத்தி வருகின்றனர்.

11] *கலையரசன் நடிக்கும் அதே கண்கள்* -
தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானது, திருலோகச்சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்த, அதே கண்கள். அந்தப் படத்தின் பெயரை கலையரசன் நடிக்கும் படத்துக்கு வைத்துள்ளனர்

12] *2030 பொருளாதாரம் கணிப்பு: டாப் 20 நாடுகள், இந்தியாவிற்கு 3வது இடம்* -
2030 ஆம் ஆண்டு உலகின் பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கப் போகும் 20 நாடுகள் எது என கணகிடப்பட்டுள்ளது. அவை உங்கள் பார்வைக்கு... *20. நைஜீரியா* :
2016 இல் 492 பில்லியன் டாலராக இருக்கும் நைஜீரியாவின் பொருளாதாரம், 2.6 சதவீத வளர்ச்சியுடன் 2030இல் 916 பில்லியன் டாலராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*19. நெதர்லாந்து* :

868 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் இருக்கும் நெதர்லாந்தின் பொருளாதாரம் 1.5 சதவீதம் வளர்ச்சி பெற்று 2030 இல் 1,089 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*18. சவூதி அரேபியா* :

2016-இல் 689 பில்லியன் டாலராக உள்ள சவூதி அரேபியாவின் பொருளாதாரம் 3.3 சதவீத வளர்ச்சியுடன் 1,205 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*17. துருக்கி* :

4 % வளர்ச்சி பெற்று இப்போது 2016 இல்923 பில்லியன் டாலராக உள்ள துருக்கியின் பொருளாதாரம் 2030 இல் 1,589 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*16. தென் கொரியா* :

நடப்பு ஆண்டு 2016-இல் 1,310 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கும் தென் கொரியா 2.1 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,906 பில்லியன் டாலாரக 2030 இல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*15. ஸ்பெயின்* :

பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடான ஸ்பெயின் 1,918 பில்லியன் டாலர்களுடன் 2030இல் இப்போது இருக்கும் 1,479 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் 1.7 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*14. ஆஸ்திரேலியா* :

2016 இல் 1,338 பில்லியன் டாலராக இருக்கும் ஆஸ்த்ரேலியாவின் பொருளாதாரம் 2.5 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,943 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*13. மெக்ஸிகோ* :

இப்போது இருக்கும் 1,244 பில்லியன் டாலர் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,970 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*12. இந்தோனேஷியா* :

இந்தோனேஷியாவின் வளர்ச்சி விகிதம் 2016 ஆம் ஆண்டின் 1037 பில்லியன் டாலரில் இருந்து 4.4 சதவீதம் வளர்ச்சி பெற்று 2030 ஆம் ஆண்டு 2077 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*11. ரஷ்யா* :
ரஷ்யாவின் வளர்ச்சி விகிதம் 2016-இல் 1,594 பில்லியன் டாலராக இருக்கிறது. இதுவே 2030 ஆம் ஆண்டு 2.3 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,219 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*10. இத்தாலி* :
இத்தாலி இப்போது 2,071 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளது. இது 2030 இல் 0.8 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,350 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*9. கனடா* :
கனடா இப்பொது 1,829 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2030 இல் 2,486 பில்லியன் டாலர்களுடன் 201 சதவீத வளர்ச்சியைப் பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*8. பிரேசில்* :
2,315 பில்லியன் டாலர்களுடன் இருக்கும் பிரேசில், 2.5 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு 2030 இல் 3,161 பில்லியன் டாலருடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*7. பிரான்ஸ்* :
2016 ஆம் ஆண்டு 2,809 பில்லியன் டாலராக இருக்கும் பிரான்ஸின் பொருளாதாரம், 2030 ஆம் ஆண்டு 1.5 சதவீத வளர்ச்சி பெற்று 3,476 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*6. ஐக்கிய ராஜ்யம்* :
2016 இல் 2,710 பில்லியன் டாலராக இருக்கும் ஐக்கிய ராஜ்யத்தின் பொருளாதாரம் 2.5 சதவீதம் அதிகரித்து 2030 ஆம் ஆண்டு 3,815 கோடியாக இருக்கும் என்று கூரப்படுகிறது.
*5. ஜெர்மனி* :
ஜெர்மனி பொருளாதாரம் இப்போது 3,747 பில்லியன் டாலாராக இருக்கிறது. இது 2030 ஆம் ஆண்டு 0.9 சதவீதம் உயர்ந்து 4,308 பில்லியன் டாலாரக இருக்கும்
*4. ஜப்பான*்:
2016 இல் 5,792 பில்லியன் டாலராக இருக்கும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 2030 இல் 0.7 சதவீதம் வளர்ச்சி பெற்று 6,535 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
*3. இந்தியா* :
இந்தியாவின் பொருளாதாரம் அளவுக்கு அதிகமாக 6.9 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது 2016இல் இருக்கும் 2,557 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி 2030 இல் 7,287 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
*2. சீனா* : இப்போது 2016இல் உள்ள 9,307 பில்லியன் டாலராக இருக்கும் பொருளாதார வளர்ச்சியை விட 5 சதவீதம் உயர்ந்து 18,829 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
*1. அமெரிக்கா* : 2030 ஆம் ஆண்டு அமெர்க்காவின் வளர்ச்சி 23,857 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இப்போது இருக்கும் 17,149 பில்லியன் டாலரை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here