இன்றைய செய்தித்தாள் 24/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 24/09/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
A] *தூத்துக்குடியில் செப்., 25 முதல் 27 வரை 144 தடை உத்தரவு*
+++++++++++++++++++
♈🇮🇳🌴1] *ஐரோப்பிய ஒன்றியம், பாலத்தீன இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் மற்றும் இலங்கையை சேர்ந்த பிரிவினைவாத குழுவான விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புக்களை தனது தீவிரவாத அமைப்புகள் குறித்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என ஒரு ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்*

+++++++++++++++
♈🇮🇳🌴2] *ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும்போது, ஒன்றியத்திலிருந்து பிரிட்டனிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ஒற்றை சந்தையில் பிரிட்டனை அனுமதிக்க சமரச தீர்வு ஒன்றை காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது சாத்தியமாக இருக்கலாம் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் மார்டீன் ஷூல்ஸ் தெரிவித்துள்ளார்*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *பேஸ்புக் தனது இணையதளத்தில் பயன்பட்டாளர்கள் சராசரியாக காணொளிக் காட்சியை காணும் நேரத்தை மிகைப்படுத்தியது என்று ஒப்புக்கொண்ட பிறகு அதன் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில், கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் வீழ்ந்தன*
++++++++++++++++
♈🇮🇳🌴4] *கடந்த மாதம் மத்திய இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தில் அழிந்த வரலாற்று சிறப்புமிக்க கிராமங்கள் மீண்டும் முழுமையாக சீரமைக்கப்படும் என்று இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி தெரிவித்துள்ளார்*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகள் ,உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து, மிக கடுமையான அளவு குண்டு வீச்சுத் தாக்குதலை சந்தித்து வருகின்றன*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *இலங்கையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை விவகாரத்தில் தொழில் அமைச்சு மற்றும் பெருந் தோட்டத்துறை அமைச்சு தலையீட்டும் உரிமையாளர்கள் சம்மேளனத்துடன் இணக்கப்பாட்டிற்கு வர முடியாதிருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன*
++++++++++++++++
♈🇮🇳🌴7] *ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம், பானி நகரத்தை சேர்ந்த மொஹமது டின் - ஷமீனா அக்தர். மொஹமது டின் அப்பகுதி காவல் நிலையம் ஒன்றில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.இந்நிலையில், மொஹமது டின் சமீபத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷமீனா தனது மகள் மற்றும் வேறு இருவரின் துணையுடன் அவரின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.இந்த ஆசிட் வீச்சில் மொஹமது பலத்த காயமடைந்தார். ஷமீனாவிற்கும் காயமேற்பட்டது. கணவன் - மனைவி இருவரும் கதுவா மாவட்ட துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொஹமது ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *400க்கும் மேற்பட்ட இந்திய முதலைகள் வரி ஏய்பு - பஹாமாஸ் தீவுகளில் முதலீடு என தகவல்கள்-பஹாமாஸ் தீவுகளில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது* -கடந்த ஏப்ரல் மாதம், வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.11.5 மில்லியன் தகவல் தரவுகளை கொண்ட இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாகி இருக்கிறது. இந்த 140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் இந்நாள், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்:

இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், டி.எல்.எப்., நிறுவனத் தலைவர் குஷண் பால்சிங், 2ஜி புகழ்நீரா ராடியா, மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்து இருந்தது.

பஹாமஸ் தீவுகளில் 400க்கும் இந்தியர்கள் முதலீடு:

இந்நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியி்ல் கியூபாவிற்கு வடக்கே உள்ள பஹாமாஸ் தீவுகள் என்ற நாட்டில், பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்துள்ளதாக 500 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஜெர்மனியில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆதாரங்களை வைத்து, இந்தியாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

பஹாமாஸ் தீவுகள் நாட்டில் சுரங்கங்கள், மின்னணு சாதன உற்பத்தி ஆலைகள், ரியல் எஸ்டேட், ஊடகம், பொழுதுபோக்கு ஆகிய பல்வேறு துறைகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் நிறுவனங்களில் 475 இந்தியர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர்.

இவர்களில் பானாமா பேப்பர்ஸ் மோசடி பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களும் அடங்குவர். குறிப்பாக வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வால், பேஷன் டிவி மேம்பட்டாளர் அமன் குப்தா உள்ளிட்டோர் அடங்குவர்.

ஏற்கனவே பனாமா பேப்பர்ஸ் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதன் அறிக்கை வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது பஹாமாஸ் மோசடி விவகாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
++++++++++++++++
♈🇮🇳🌴9] *37 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து சிதறிய ராணுவ குண்டு-வேலூரில் விவசாய நிலத்தில் கிடந்த ராணுவ கையெறி குண்டினை, வெடிகுண்டு நிபுணர்கள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் செயலிழக்க செய்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *அய்யய்யோ!.. 95 சதவீத வீடுகள் பூகம்பத்தை தாங்காது- ‘நாட்டில் உள்ள, 95 சதவீத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு பூகம்பத்தை தாங்கும் திறன் இல்லை’ என, தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது* -பூகம்ப அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக குஜராத், பீகார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பூகம்பத்தை தாங்கக் கூடியவை அல்ல.தற்போது நாடு முழுவதும், 30 கோடி வீடுகள் உள்ளதாகவும், அவற்றில் 95 சதவீத வீடுகள், பூகம்பத்தை தாங்கும் திறன் அற்றவை என்றும் தெரிவித்துள்ளது. சமீபத்திய நில அதிர்ச்சி மண்டலம் வரைபடம் படி இந்தியாவின் நிலப்பரப்பில் 59 சதவீதம் மிதமான அல்லது கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்படையக் கூடியதாக உள்ளது தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளை சுட்டிக்காட்டி புதிய வரைபடம் ஒன்றையும் தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
++++++++++++++++
♈🇮🇳🌴11] *மாநிலங்களில் ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அருண் ஜெட்லி தகவல்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *பண்டிகை காலத்தையொட்டி கோதுமை, உருளைகிழங்கு, பாமாயிலுக்கு இறக்குமதி வரி குறைப்பு*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *பா.ஜனதா தேசிய கவுன்சிலின் 3 நாள் கூட்டம் தொடங்கியது மோடி இன்று கோழிக்கோடு வருகிறார்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *காஷ்மீரில் 77–வது நாளாக போராட்டம்: ஊரடங்கு உத்தரவால் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு பேரணி நடத்த முயன்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல் சிங்கப்பூரில் இந்தியருக்கு 20 மாதம் சிறை*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *இந்தியாவின் ‘சாகர்மாலா’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு பிரதமர் ரனில் விக்ரம சிங்கே தகவல்*
++++++++++++++++
♈🇮🇳🌴19] *6 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு சென்னை பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டது*
++++++++++++++++
♈🇮🇳🌴20] *தாமதம் ஏன்?*

அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ரத்தம், ஸ்கேன் பரிசோதனை உள்பட மொத்தம் 12 பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் ஒரு சில முடிவுகள் மட்டுமே தற்போது வந்துள்ளது. ஒரு சில முடிவுகள் வருவதற்கு 48 மணி நேரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இன்று(சனிக்கிழமை) இரவு மொத்த பரிசோதனை முடிவுகளும் மருத்துவர்கள் கையில் கிடைக்கும். அதன்பிறகு மேற்கொண்டு சிகிச்சைப் பெற்று அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோதான் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என தெரிகிறது.

அறை மாற்றமா?

மேலும் சில தினங்கள் அவர் அங்கு தங்க வேண்டி இருப்பதால் அதற்கு வசதியாக அவர் வேறு அறைக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴21] *சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ராணுவத்துக்காக நவீன வசதியுடன் சமையல்அறை ரெயில்பெட்டி தயாரிப்பு*
++++++++++++++++
♈🇮🇳🌴22] *சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள டில்டா நியேரா என்னுமிடத்தில் உள்ள பஜ்ரங் மின் நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴23] *கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையால் நேற்று பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோவையில் இயல்புநிலை திரும்புகிறது. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴24] *மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது*
++++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴25] *டேட்டிங் ஆப்ஸில்  ஆண்களுக்கு ஆசை காட்டி வலை விரிக்கும்  இந்த பெண்ணுடன் டெல்லியைச் சேர்ந்த  ஒருவருக்கு அறிமுகம் கிடைத்தது. தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என அந்த பெண் அவரிடம் கூறியுள்ளாள். இதையடுத்து அந்த பெண் குறிப்பிட்ட இடத்துக்கு தனது நண்பருடன் அவர் சென்றுள்ளார். அப்போது அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ரூ.11,000 கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி போலீடம் புகார் அளித்தனர். கிரண் கார்டனுக்கு விரைந்த போலீசார், ஆலம், அவரது பெண் நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்*.
+++++++++++++++++++++++
♈🇮🇳🌴26] *டெல்லியில் வெப்பம் அதிகரித்தது. வானிலையில், அதிகமாக 36 டிகிரி,குறைவாக 27 டிகிரி பதிவானது. இன்று காலையில் இதமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதியத்துக்கு மேல் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொகல்லா கிளினிக்குகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு*
+++++++++++++++++++++++
♈🇮🇳🌴27] *டெல்லியில் வெப்பம் அதிகரித்தது. வானிலையில், அதிகமாக 36 டிகிரி,குறைவாக 27 டிகிரி பதிவானது. இன்று காலையில் இதமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதியத்துக்கு மேல் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொகல்லா கிளினிக்குகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு*
+++++++++++++++++++++++
♈🇮🇳🌴28] *காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூருக்கும் வரும் காக்கிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 1ம் தேதி முதல்  செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் காக்கிநாடாவில் புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.காக்கிநாடாவில் இருந்து சென்ைனை எழும்பூருக்கு வரும் இந்த ரயில் மாம்பலம், தாம்பரம்  ரயில் நிலையத்தங்களில் நின்று செல்கிறது*
+++++++++++++

...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here