======================
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முற்றிலும் இயற்கை முறையில் தயாராகும் ஆர்கானிக் புடவைகள் கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப் படுகின்றன.
இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், ரசாயனக் கலவை இல்லாமல் இயற்கை முறையில் உற்பத்தியாகும் ஆடை ரகங்க ளுக்கும் மக்களிடையே வர வேற்பு கிடைத்துள்ளது. அதனடிப் படையில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் தொடக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் ரசாயனக் கலப்பின்றி தயாரிக்கும் ஆர்கானிக் ஆடை ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
விருதுநகரில் தெப்பம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் நேற்று தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து முதுநிலை மேலாளர் அன்பழகன் கூறியது:
தீபாவளிக்காக வாடிக்கை யாளர்களைக் கவரும் வகை யில் பருத்தி, பட்டு சேலைகள், வெண்பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்து ள்ளன. மேலும், உடல் நலம், சுற்றுப்புறத்துக்கு பாதிப்பு ஏற்படு த்தாத வகையில் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பருத்தியில் இருந்து நூல் தயாரித்து அதில் ரசாயனக் கலவைகள் இல்லாமல் இயற்கையான முறையில் வண்ணங்கள் தீட்டிய ஆர்கானிக் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புகோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் கோவையில் ஆர் கானிக் சேலைகள் தயாரிக் கப்படுகின்றன. இவை ரூ. 1,610 முதல் அதிகபட்சமாக ரூ.3,290 வரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்களுக்கான ஆர்கானிக் சட்டைகள், வேஷ்டிகள், பெண் கள் விரும்பி அணியும் சுடிதார் ரகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதோடு, www.cooptex.com என்ற இணையதளம் மூலமும் இந்த வகை ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், ரூ. 2 ஆயிரம் ரொக்கத்துக்கு ஆடைகள் வாங்குவோருக்கு தங்கமலை பரிசுத் திட்டம் மூலம் முதல் பரிசு 8 கிராம் தங்கக் காசு 5 பேருக்கும், 2-ம் பரிசாக 4 கிராம் தங்கக் காசு 15 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு மதுரை மண்டலத்துக்கு விற்பனை இலக்காக ரூ.30 கோடி, விருதுநகர் மாவட்டத்தில் விரு துநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர் விற்பனை மையங் களுக்கு ரூ. 2.80 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றார்.
courtesy: The Hindu Tamil
Sep 22, 2016
==================
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக