நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாது :Anti Court ஹீரோவாக தேர்தலை சந்திக்க தி.டமிடுகிறார் சித்தராமையா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாது :Anti Court ஹீரோவாக தேர்தலை சந்திக்க தி.டமிடுகிறார் சித்தராமையா


தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் 4 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு மீண்டும் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமய்யா ‘கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களை ஆதாரத்துடன் மேற்பார்வைக் குழுவிடம் அளிக்கப்பட்டது. 20 முதல் 30ஆம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்துவிட மேற்பார்வைக்குழு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமோ வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக நாளை மாலை 5 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் சித்தராமய்யா தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர், எம்.பி.க்கள் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here