*🛡TNPTF அலுவல் செய்தி🛡*
நாள் : 22.09.2016
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*வல்லுநர் குழு சந்திப்பு - CPS நீக்கமே ஒரே தீர்வு : TNPTF வலியுறுத்தல்*
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் (TNGEA), தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) உள்ளிட்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) உறுப்பு இயக்கங்கங்களும் இணைந்து பிப்ரவரி மாதத்தில் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் பலனாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவுடன் இன்று நடைபெற்ற கருத்துப் பகிர்வுக் கூட்டத்தில் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலத் தலைவர், மாநிலப் பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் கலந்து கொண்டனர்.
வல்லுநர் குழுவிடம் CPS நடைமுறையின் காரணமாக ஊழியர்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆனால், வல்லுநர் குழுவோ தற்போதைய CPS திட்டமே சிறந்தது என்றும் வேண்டுமானால் இதில் சிற்சில மாற்றங்களைச் செய்து தருவதாகக் கூறியது.
TNPTF தரப்பில், CPS நல்ல திட்டமெனில் நாளது தேதி வரை இராணுவத்தினருக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை இத்திட்டத்தில் சேர்க்காததன் காரணம் என்ன என வினவியதோடு, இத்திட்டம் துளியும் ஊழியர் நலனைக் கருத்தில் கொள்ளாத திட்டம் என்பதாலேயே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்கள் தங்களின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரவே இல்லை என்றும், இராணுவத்தினரிடையே எழுந்த ஒருமித்த எதிர்ப்பின் காராணமாக அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது என்றும் எடுத்துக்கூறப்பட்டது.
இறுதியாக, *CPS-ஐ முற்றாக நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ஊழியர்களுக்கும் நாட்டிற்கும் நல்லது எனத் தீர்க்கமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக