%%%%%%%%%%%%%%%%%%
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
%%%‰%%%%%%%%%%%%%%
*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு செப்டம்பர் 30-ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, மத்திய அரசின் வாதத்தை அடுத்து, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*டில்லி விழா மேடையில் ஆம்ஆத்மி அமைச்சர் - மெகபூபா காரசார மோதல்*
*ஊக்கமருந்து விவகாரம்: மரியா ஷரபோவாவின் தடை காலம் குறைப்பு*
*உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு கருணாநிதி வரவேற்பு*
*ஜெ. சிகிச்சை பெற்று வரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனைக்குள் செல்ல எந்த கெடுபிடியும் இல்லை. அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன். முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக குணமடைந்து வருகிறார். அவர் பூரண குணமடைந்து மக்கள் பணி ஆற்றுவார் என்று நம்புகிறேன் என்றார்*
*தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரி்த்துள்ளது. நேற்று 1350 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 6500 கனஅடி தண்ணீர் வருகிறது. காவிரியில் 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு திறந்துவிட்ட தண்ணீரால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது*
*தமிழ்நாட்டின் கழுத்துக்கே பிரதமர் மோடி கத்தி வைத்து இருக்கின்றார்: வைகோ-நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: வைகோ*
*திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 8 பேர் சரண்* -சென்னை அருகே படப்பை திமுக கவுன்சிலர் தனசேகரன் கடந்த 2ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டர். இந்த கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.அருண்குமார், சுரேஷ், கன்னியப்பன், அஜித்குமார் உள்ளிட்ட 8 பேர் மணிமங்கலம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்
1] *சிவகாசி பேருந்து நிலையம் அருகே தீக்குச்சி கழிவுகள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் பிடித்த தீயை 2 வாகனங்களில் வந்த வீரர்கள் அணைத்து வருகின்றனர்*
2] *தேனி மாவட்டம் கம்பத்தில் வாகன சோதனையில் 360 கிலோ கஞ்சா சிக்கியது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை லாரியில் கடத்தி வந்த தேவேந்திரன், சேகர் கைது செய்யப்பட்டுள்ளனர்*
3] *நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு நீதிமன்றக் காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம் யுவராஜை 25ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது
4] *யாழ்பாணம் அருகே சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை வரும் 18ம் தேதி வரை சிறையிலடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இலங்கை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது*
*டெல்லியில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சில நாட்கள் வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக