மதிய செய்திகள் 06/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 06/10/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
*டெல்லி யில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத் திரியில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர்  டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை  நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகி யோர்  அடங்கிய மருத்துவ நிபுணர்கள் டெல்லியில்   இருந்து புறப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் அப்பல்லோ  ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.அங்கு முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும்  டாக்டர் களுடன் கலந்து ஆலோ சித்தனர். இதுவரை முதல் அமைச்சருக்கு அளித்து வந்த சிகிச்சை முறைகளையும், மருத்துவ அறிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக அளிக் கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி டாக் டர்களிடம்  கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இரவு  10 மணியில்  இருந்து 12.30 மணி வரை ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை  முறைகளை எடுத்து கூறினார்கள். அதன் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது*

*கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள், தாக்கி விரட்டியடிப்பு படகு மூழ்கடிப்பு.ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 400 விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருதரப்பினர் மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந் தனர்.அப்போது 6 சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம்  மீனவர் களிடம், இங்கு மீன்பிடிக்க கூடாது. உடனே புறப்பட்டு செல்லுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி, அவர்கள் வைத்திருந்த மீன்பிடி சாதனங்கள், வலை களை நாசப்படுத்தி கடலில் வீசினர்.தொடர்ந்து அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் சர மாரியாக தாக்கி விரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பினர்.அப்போது தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக் கியகுரூஸ் என்பவரின் படகு மீது ரோந்து கப்பலை, இலங்கை கடற்படையினர் மோத செய்தனர். இதில் அந்த படகு சேதமானதால் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அந்த படகில் இருந்த ஆண்டரூஸ், ஜெகன், நாகராஜ், உமேஸ், ரபோ ஆகிய 5 மீனவர்கள் கூக்குரலிட்டனர்.உடனே சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றி ராமேசுவரத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து பாதிக்கப் பட்ட மீனவர்கள் கூறுகை யில், நாங்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எங்களை சரமாரியாக தாக்கி விரட்டியடித்தனர். இதில் ஒரு படகு சேதமாகி மூழ்கிவிட்டது*

A] *பயங்கரவாத முகாம்களால் நரக வேதனையை அனுபவித்துவருகிறோம்: பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்*

B] *’சீன பொருட்களை நிராகரியுங்கள்’இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் ’சீனாவின் பொருட்களை நிராகரியுங்கள்’ என்ற பிரச்சாரமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த விழா காலங்களில் சீன தயாரிப்பு பொருட்களை நிராகரியுங்கள் என்று சமூக வலைதளங்களில் பிரச்சாரம் வலுப்பெற்று உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவின் செயல்பாட்டினால் கடும் கோபம் அடைந்துஉள்ள மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் சீன பொருட்களை நிராகரியுங்கள் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மேலும் இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திராவின் கிளை நதியை சீனா மறித்து உள்ளது கோபத்தினை அதிகமாக்கிஉள்ளது. இதற்கிடையே மசூத் அசாருக்கு தடை விதிக்கவேண்டிய தேவை குறித்து சீனாவிடம் வலியுறுத்த இந்தியா விரிவான திட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக*

♈🇮🇳🌴1] *அக்டோபர் 4 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு முதல்வரின் உடல் நலம் குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.இன்று தலைமை நீதிபதி முன்பாக அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கணேசன், தன் கோரிக்கைகளை முன்வைத்தார்.இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், உடல்நலமற்று இருப்பவர்களின் புகைப்படத்தை வெளியிட முடியாது என்றும், அரசு தற்போது செயல்பட்டு வருவதால் தற்காலிக முதல்வரை நியமிக்க முடியாது என்றும் கூறி வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்தார்.முதல்வரின் உடல்நலம் குறித்த செய்திகளை மருத்துவமனை வெளியிட்டு வருவதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்*

+++++++++++++++
♈🇮🇳🌴2] *மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரி போட்டியின் போது, தங்கள் உள்ளாடை வரை கழட்டி காட்டியதற்காக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த 9 வாலிபர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். தங்கள் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பின்னர் அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஃபார்முலா போட்டியில் தங்கள் நாட்டை சேர்ந்த டேனியல் ரிக்கார்டோ வெற்றி பெற்றதை தொடர்ந்து அதை கொண்டாடும் வகையில் அவர்கள் தங்கள் ஆடைகளை கழட்டி உள்ளனர். ஒவ்வொரு ஆடையையும் அவர்கள் கழற்றிய நிலையில், இறுதியாக மிச்சமிருந்த உள்ளாடையில் மலேசியாவின் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுக்க, இந்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது*

++++++++++++++++
♈🇮🇳🌴3] *தரம் குறைந்த விந்தணுப் பிரச்சனையை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட செயற்கை கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தும் ஆண்கள் , அவர்களின் ஆண் குழந்தைகளுக்கும் அதே பிரச்சனையை கொடுக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செயற்கை முறையில் கருத்தரித்தல் (இன்விட்ரோ பெர்டிலைசஷன்-in vitro fertilization) தொழில் நுட்பம் மூலம் பிறக்கும் ஆண் குழந்தைகள், தரம் குறைந்த விந்தணு பிரச்சனையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இன்ட்ரோ சைடோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (intra-cytoplasmic sperm injection) என்ற ஊசி மூலம் மூலம் ஒரு விந்தணுவை நேரடியாக ஒரு கரு முட்டையில் செலுத்தப்படும் தொழில்நுட்பம் செயற்கை முறையில் கருத்தரித்தலில் ஒரு வகையானதாகும்.இவை எதிர்பாராத முடிவுகள் அல்ல என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 1990 களின் ஆரம்பத்தில், இந்த வகை ஊசியேற்றுதல் தொழில்நுட்பம் மூலம் பிறந்த ஆண் குழந்தைகள், முதிர்ச்சி அடைந்தால் மட்டுமே இந்த முடிவுகளை உறுதிப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டினர்*
++++++++++++++++
♈🇮🇳🌴4] *அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை திருட சதியில் ஈடுபட்டதற்காக சீனா நபர் ஒருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.காப்புரிமை பெறப்பட்ட சோள விதைகளை மோ ஹெயிலாங் என்ற அந்த நபர் சீனாவுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.இந்த விதைகள் விவசாய பெருநிறுவனங்களான டுபோன் பயோனீர் மற்றும் மொன்சான்டோ ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானதாகும். இந்த விதைகளை தன்னை வேலைக்கு பணியமர்த்திய நிறுவனமான பெய்ஜீங் டபெயிங் டெக்னாலஜி குழுமத்திடம் கொடுக்க மோ திட்டமிட்டிருந்தார்.இறுதியில், டுபோன் பயோனீர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் கொடுத்த ரகசிய தகவலின்படி, அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம், எஃப்.பி.ஐ இந்த சதி செயலை முறியடித்தனர்.அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடுவது என்பது தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும் என்று இந்த வழக்கில் தொடர்புடைய அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *மெக்ஸிகோவின் கிழக்கு மாகாணமான வெரகுரூஸில் உள்ள குவாட்ஸ்குவால்கோஸ் என்ற பகுதியில் கடத்தல் கூட்டத்தின் தலைவரும் மற்றும் அந்த குழுவை சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.இந்த குழுவானது 12 கடத்தல் சம்பவங்களில் தொடர்புள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும், பணயத்தொகையை பெற்ற பிறகும் தங்களுடைய பணயக் கைதிகளை அடிக்கடி கொன்றுள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.பல ஆண்டுகளாக கடத்தல் மற்றும் போதை வன்முறை சம்பவங்களால் வெரகுரூஸ் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *இராக்கின் வட நகரமான மொசூல் மீது அரசு படையினர் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் நடத்தும் திட்டமிட்ட தாக்குதலால் சுமார் 6 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் ஆபத்துக்குள்ளாவதாக 'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴7] *40 ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்புப் படைகள் மற்றும் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களால், நிராயுதபாணியான மாணவ போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தைக் குறிக்க தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் துக்கம் அனுசரிப்போர் மற்றும் ஆர்வலர்கள் கூடினர்.தம்மாசட் பல்கலைக்கழகத்தில் 1976ல் நடந்த அடக்குமுறையின்போது, 46 கொல்லப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பக்கசார்பற்ற தகவல்களின்படி, இறந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *மத்திய தரைக்கடலை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் நிலவும் தீவிரவாதத்தை சமாளிக்கும் வழிகளை ஆராய ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இன்று வியன்னாவில் சந்திக்கவுள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴9] *ஃபார்க் போராளிகள் மற்றும் கொலம்பியா அரசாங்கம் மீண்டும் போருக்கு தயாராகக் கூடாது என்பதை வலியுறுத்தி சமாதான உடன்படிக்கையின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க பேரணிகளை நடத்தி உள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்க்கட்டுப்பாட்டு பகுதியான லாங்கோட், ராம்பூர், நாம்காம் ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லையில் ஊடுருவ  பயங்கரவாதிகள் முயற்சித்தனர். இதையடுத்து உஷாரான ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்தனர். அதேபோல், வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ராணுவம் விரட்டியடித்தது. ஹந்த்வாரா அருகே உள்ள லாங்கேட்டில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது*

++++++++++++++++
♈🇮🇳🌴11] *பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு உதவ சர்வதேச கொடையாளர்கள் மாநாடு நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை ஒருவர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்தினார். பின்னர் அருகில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியின் வயிற்றிலும் குத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு போலீஸ் அதிகாரி அந்த நபரின் காலில் துப்பாக்கியால் சுட்டார். அப்போது அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட அதிகாரியின் மூக்கை தாக்கினார்.இதை கண்ட மற்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 43 வயதுடைய அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்தது. இச்சம்பவம் பயங்கரவாதிகள் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காயம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து இல்லை என பெல்ஜியம் அரசு தெரிவித்தது.இதனிடையே பிரசல்ஸ் நகரில் உள்ள ஒரு முக்கிய ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் உடனடியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது வெறும் புரளி என தெரியவந்தது. பெல்ஜியத்தில் அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. பிரசல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴12] *அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி வேட்பாளர்கள் மோதல் டிரம்ப் முட்டாள் என்றும், ஹிலாரி பலவீனமானவர் என்றும் வார்த்தை யுத்தம்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி.ஹப்தார் படைகள், போராளிகளை குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. ஆனால் அவற்றில் சில குண்டுகள், குடியிருப்பு பகுதிகளில் போய் விழுந்தன. இதில் அப்பாவி மக்கள் 3 பேர் சிக்கி உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.  இது பெங்காசி நகரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்டு நகரில் வசிப்பவர் பால்மீத் சிங். சீக்கியர்.இவர் சம்பவத்தன்று அங்கு தனது நண்பர்களுடன் கலிபோர்னியா அவினியு என்ற இடத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்றார். சாப்பாட்டுக்கு இடையே அவர் உணவு விடுதிக்கு வெளியே வந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அவரை நோக்கி வந்த ஒரு மர்ம நபர், ‘‘நீ இந்த நாட்டை தகர்க்கப்போகிறாய். நான் உன்னை கொன்றாக வேண்டும். உன்னை நான் இப்போதே கொல்லப்போகிறேன்’’ என கோப ஆவேசத்துடன் கூறினார்.அத்துடன் பானத்தை பால்மீத் சிங் மீது வீசினார். அது அவரது தலைப்பாகை, தாடி, உடை, செல்போன் மீது சிதறியது.அதைத் தொடர்ந்து அந்த நபர், வாகனங்கள் நிறுத்துமிடத்தை நோக்கி சென்று விட்டார். அவரை பால்மீத் சிங் பின்தொடர்ந்து சென்று, அவரது வாகன எண்ணை குறித்து கொண்டு வந்து போலீசில் புகார் செய்தார்*+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴15] *தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூட்டு இயக்கம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் எழும்பூரில் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கூட்டு இயக்கதலை வர் தெய்வசிகாமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, மல்லை சத்யா (ம.தி.மு.க.), பீட்டர் அல்போன்ஸ், பவன்குமார் (காங்கிரஸ்), டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்),  கோவை தங்கம், விடியல் சேகர் (த.மா.கா.), குணசேகரன், பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்டு), சண்முகம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), அன்பு (நாம் தமிழர்), அபுபக்கர் எம்.எல்.ஏ. (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), த.வெள்ளையன் (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டனர்*++++++++++++++++++++++++

♈🇮🇳🌴16] *தே.மு.தி.க. பிரமுகரின் மகன் கடத்தி கொலை. பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். எல்லாபுரம் ஒன்றிய தே.மு.தி.க. தொண்டரணி செயலாள ராக உள்ளார்.இவரது மனைவி ஹேமலா. மகள்கள் சுரேகா, சுனிதா, 3 வயது மகன் ஹேமனாத்.நேற்று இரவு முருகன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். அவர் வீட்டு கதவை பூட்டாமல் வைத் திருந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை முருகன் எழுந்து பார்த்த போது மனைவியுடன் தூங்கிய மகன் ஹேமனாத்தை காணவில்லை. வீட்டு கதவும் திறந்து கிடந் தது.
அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவியிடம் விசாரித்த போது எதுவும் தெரியவில்லை. இது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் ஊர் முழுவதும் சிறுவன் ஹேமனாத்தை தேடி பார்த் தனர்.அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே இருந்த சிமெண்டு தொட்டியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஹேமனாத் பிண மாக கிடந்தான். அவனது வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது.வீட்டில் தூங்கிய அவனை மர்ம நபர் கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தொட்டியில் வீசி இருப்பது தெரிந்தது*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *வங்கி ஏடிஎம் ரூ.1.18 கோடி பணம் கொள்ளை சம்பவம் தேடப்பட்ட இசக்கிபாண்டியன் கோர்ட்டில் சரண்*++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here