http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴1] *ஆம்னி பஸ்களுக்கு தமிழக எல்லையில் நுழையும்போது விதிக்கப்பட்ட கூடுதல் வரி தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது*
+++++++++++++++
♈🇮🇳🌴2] *‘‘காஷ்மீரில் உயிர் தியாகங்களை செய்துள்ள நமது வீரர்களின் பின்னால் நீங்கள் (மோடி) ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய வீரர்கள் ரத்தம் சிந்தி, துல்லியமான தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ நமது வீரர்களின் ரத்தத்தில் கொலைக்கான தரகு பார்க்கிறீர்கள்’’ என ராகுல் கூறினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.அமித்ஷா கண்டனம்-ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டெல்லியில் நேற்று கட்சி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘ராகுல் காந்தியின் கருத்து, ராணுவத்தில் விரக்தி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கொலைக்கான தரகு என்று நீங்கள் (ராகுல் காந்தி) எதைக் குறிப்பிடுகிறீர்கள்? ராகுல் காந்தி இந்த கருத்தின்மூலம் எல்லை மீறிப்போய் விட்டார். அவர் ராணுவத்தை அவமதித்து விட்டார்’’ என்று கூறினார்.மேலும் அவர் கூறும்போது, ‘‘நாங்கள் ராணுவ வீரர்களின் பின்னால் நிற்கிறோம். அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் நமது நாட்டு வீரர்களின் துப்பாக்கி தோட்டாக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.அத்துடன், ‘‘கொலைக்கான தரகு என்று நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை உங்கள் கட்சிக்குள் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றும் கூறினார்.கெஜ்ரிவால் கண்டனம்-இதே போன்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் பழக்கத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சாயாரோ பானோ உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றுக்கு மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது. அதை ஏற்று, மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் அதன் கூடுதல் செயலாளர் முகுலிதா விஜயவர்கியா நேற்று 29 பக்க பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.அதில், முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள ‘3 முறை தலாக்’ நடைமுறைக்கும், பலதார மணத்துக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவற்றுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே முதல்முறை ஆகும்.மனுவில் மத்திய அரசு கூறி இருப்பதாவது:–இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்–பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. அதில் சமரசத்துக்கு இடமில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது.பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதற்கு மதம் காரணமாக இருக்கலாமா என்ற அடிப்படை கேள்வியை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும். மேற்கண்ட அடிப்படையில், இந்த வழக்கத்தை கோர்ட்டு மறுஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴4] *காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல்*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை*
++++++++++++++++
♈🇮🇳🌴7] *காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு சட்டபூர்வமாக அமைக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் வைகோ பேச்சு*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++
♈🇮🇳🌴9] *பொது சொத்துக்களை சேதப்படுத்திய இந்து முன்னணி அமைப்பினரிடம் இழப்பீடு வசூலிக்கக்கோரி வழக்கு தமிழக அரசு முடிவு எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாத போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் போக்குவரத்து கூடுதல் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு*
++++++++++++++++
♈🇮🇳🌴11] *காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் கலவரத்தால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடங்களும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. இதனால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என காஷ்மீர் மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களின் கைகளில் புத்தகங்களுக்கு பதிலாக கற்களையும், ஆயுதங்களையும் போராட்டக்காரர்கள் வழங்குவதாக பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: காவலர் ஒருவர் பலி*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *பெரியகுளம் அருகே கருத்துப்பட்டியில் அரசு பேருந்து மீது நடந்த கல்வீச்சு தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். நிறுத்தத்தில் பேருந்து நிக்காததால் ஆத்திரமடைந்த 12ம் வகுப்பு மாணவன் கல்வீசித் தாக்குதல் நடத்தினான். இதனைத் தொடர்ந்து மாணவன் மீது பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் 15 வயதுமிக்க பெண் யானை உயிரிழந்தது. கருப்புராயன் கோயில் வனச்சரகத்தில் உயிரிழந்த பெண் யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலை 3ம் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆண்டுப் பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *உலகக் கோப்பை ஆடவர் கபடி போட்டியில் தென்கொரியாவிடம், இந்திய அணி தோல்வியடைந்தது. 32-34 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்*
+++++++++++++++++++
♈🇮🇳🌴19] *பரமத்தி வேலூரில் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி*
++++++++++++
♈🇮🇳🌴20] *திருச்சி: தகராறில் ஈடுபட்ட 11 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட்*
++++++++++++
♈🇮🇳🌴21] *பண்டிகை கால சிறப்பு ஏற்பாடுகள்: கோயம்பேட்டில் அமைச்சர் ஆய்வு *
+++++++++++++++
♈🇮🇳🌴22] *விக்னேஷ்வரன் கோரிக்கையை நிராகரித்த ரணில்* -இலங்கை தமிழர் பிரச்சனைக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில் நிராகரித்துள்ளார்
++++++++++++++
♈🇮🇳🌴22] *இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்* -இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் 2ம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
++++++++++++++
♈🇮🇳🌴23] *சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்கரில் வீடு புகுந்து திருடிய திருடன் கைது. அவனிடம் இருந்த 20பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக