இன்றைய முக்கிய செய்திகள் 10/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய முக்கிய செய்திகள் 10/10/2016

√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
♈🇮🇳🌴1] *ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்*

+++++++++++++++
♈🇮🇳🌴2] *அமெரிக்காவின் தென் கிழக்கில் மேத்யூ சூறாவளியால் பலியானோரின் எண்ணிக்கை 15 -ஆக உயர்ந்துள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *இராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய பகுதியான மொசூலிலிருந்து ஐ.எஸ் போராளிகளை வெளியே துரத்த நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த தாக்குதலுக்கு முன்னதாக அங்கு வசிக்கும் மக்களுக்கு நீண்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴4] *மியான்மாரின் வங்கதேசத்துடனான எல்லைப்பகுதியை ஒட்டி இருந்த மூன்று காவல் நிலைகள் மீது ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது போல தோன்றும் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம் பாம்ப்பூரில் தீவிரவாதிகளுடம் ராணுவம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *தஞ்சை : கும்பகோணம் அருகே 4வயது குழந்தையை கொலை செய்து ஆற்றில் வீசிய தாய் ரேகா கைது செய்யப்பட்டார். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் வளர்க்க குடியவில்லை எனக் கூறி கொன்றதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். திருக்கருகாவூர் வெட்டாற்றில் 4 வயது குழந்தை சிவா 8 ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது*
++++++++++++++++
♈🇮🇳🌴7] *மேகதாதுவில் கர்நாடகா அணைகட்டினால், நீதிமன்றம் எந்ததீர்ப்பு அளித்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர்வராது என்று மதுரை விமானநிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் 2014-ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *திண்டிவனம் அருகே வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ் ஆரோவில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திண்டிவனம் அருகே துருவையில் பட்டாசு ஆலையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது*

♈🇮🇳🌴9] *ஆலந்தூர்: ஆதம்பாக்கம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சதீஷ் (30), பெயின்டர். வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குடிசையில் மனைவி, குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று சதீஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி, குழந்தைகள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். நேற்று மதியம் அப்பகுதி சிறுவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது பறந்து வந்த தீப்பொறி மாடியில் உள்ள குடிசையில் விழுந்து தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி அருகில் உள்ள ஆட்டோ டிரைவர் ஆதி (40) என்பவரின் குடிசைக்கும் பரவியது. தகவலறிந்து வேளச்சேரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♈🇮🇳🌴10] *சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், சேலம்,  கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி என 11 ஊர்களில்  உள்ள தேர்வு மையங்களில் வரும் 22ம் தேதி இந்த தேர்வு நடக்கிறது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் இதுதொடர்பாக வெளியிட்ட செய்திகுறிப்பு: அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்ததன் அடிப்படையில், தகுதி உடையவர்களுக்கான தேர்வு அனுமதி சீட்டு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது*

♈🇮🇳🌴11] *சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை*

♈🇮🇳🌴12] *மேலூர்: எலி பிஸ்கட் சாப்பிட்ட இரு குழுந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *காவிரி உயர்மட்ட குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிப்பு*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *மதுரை: கட்டட தொழிலாளி கத்தியால் குத்தி கொலை*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *திருக்குவளை தியாகராஜர் சுவாமி கோவிலில் மரகத லிங்கம் திருட்டு*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *காவிரி பிரச்னை; தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமரை சந்திப்பர் : ஸ்டாலின்*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *ஜெ., விரைவில் நலம் பெற தேவகவுடா வாழ்த்து*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *டில்லியில் ரூ.9 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதை இறக்குமதி செய்த பஞ்சாப் தொழில் அதிபர் மற்றும் தரகர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லியில் கன்டெய்னர் மூலம் சீன பட்டாசுகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துக்ளகாபாத் பகுதியில் உள்ள கன்டெய்னர் கிடங்கில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6 பெரிய கன்டெய்னர்களின் மேல் பகுதியில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள், சைக்கிள் உதிரி பாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை திறந்து சோதனையிட்டனர்.மேல் பகுதியில் மருத்துவ உபகரணங்களும், சைக்கிள் உதிரி பாகங்களும் இருந்தன. கீழ் பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ரூ.9 கோடி மதிப்புள்ள அந்த பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதை இறக்குமதி செய்த பஞ்சாப் தொழில் அதிபர் மற்றும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴19] *+2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் விடைத்தாள்களில் அவர் எழுதவில்லை: உண்மை அம்பலம்* பீகார் மாநிலத்தில் +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியின் விடைத்தாள்கள் அவர் எழுதியது அல்ல என்று தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது

++++++++++++++++
♈🇮🇳🌴20] *நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை*
++++++++++++++++
♈🇮🇳🌴21] *வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை* -சென்னை மயிலாப்பூர் அருகே பிரமிளா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நகை கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

++++++++++++++++
♈🇮🇳🌴22] *சென்னை - சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி உயிரிழப்பு* -சென்னை நீலாங்கரையில் சாலையை கடக்க முயன்ற வசந்தி என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த கார் சாலையில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 2 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
---++++--------+++++----------+++++—----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here