7 மணி நிகழ்வுகள் 05/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

7 மணி நிகழ்வுகள் 05/10/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴*சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பதிலுக்கு பதில் பேச வேண்டாம்: பிரதமர் உத்தரவு*

♈🇮🇳🌴*ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில், பண்ணாரி சோதனை சாவடியில் கர்நாடக பதிவெண் கொண்ட அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது*

♈🇮🇳🌴*திருவண்ணாமலை மாவட்டம் மங்களத்தில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த பாரதிராஜா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சுகாதார ஆய்வாளர் நடத்திய ஆய்வின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்*

♈🇮🇳🌴 *மம்தாவின் துர்க்கை அவதாரம்!* -
அரசியல்வாதிகளின் மனத்தைக் குளிர்விப்பதற்கும், அவர்களைக் கவர்வதற்கும் நம் ஊரில் கட் அவுட் வைப்பார்கள். (நடிகைகளுக்கே கோவில்கட்டிய பாரம்பரியம் நம்மிடமுண்டு.) மேற்கு வங்காளத்துக்காரர்கள் சிலைவைத்திருக்கிறார்கள். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில்தான் இந்த சிலை வைக்கப்பட்டிருக்கிறது. வங்காளத்தின் தென்பகுதியில் இருக்கிறது நாடியா மாவட்டம்

♈🇮🇳🌴1] * பிரதமர் மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு*

+++++++++++++++
♈🇮🇳🌴2] * பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி சந்திப்பு*

++++++++++++++++
♈🇮🇳🌴3] * பிரதமர் மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு*

++++++++++++++++
♈🇮🇳🌴4] *பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் திரும்பியுள்ளது. பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. சார்க் நாடுகள்,அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன்,பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் தற்போது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
சீனா கூட நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானை சுற்றி உள்ள நாடுகள் கூட அதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.இனிமேலாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் சர்வதேச சமூகத்தில் இருந்து தனித்துவிடப்படும் நிலை வரும்.அந்நாட்டில் நடக்க வேண்டிய சார்க் மாநாட்டை நடத்த முடியாமல் போனதுடன் பல நாடுகள் மாநாட்டை புறக்கணித்தது பாகிஸ்தானுக்கு தக்க பாடமாக அமைய வேண்டும்*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *பேச்சுவார்த்தை மூலமே மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ரணில் விக்ரம சிங்கே பேச்சு*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த கட்டிடம் மளமளவென சரிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்* பெங்களூருவில் 5 மாடி கட்டடம் இடிந்து இருவர் பலி
++++++++++++++++
♈🇮🇳🌴7] *காஷ்மீர் எம்.எல்.ஏ வீடு மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்தான் ஜுனியர் காக்ஸ் நூன். பிறக்கும் போதே தலைநிறைய முடி இருந்ததால்  இதன்மூலம் அந்த பகுதி மூலம் பிரபலம் அடைந்தான் காக்ஸ். வீட்டிலேயே அவனுக்கு ஹீட்டர் மூலம் ஹேர் ஸ்டைல் கொண்டு வந்தார் அவரது தாயார். இதனால் இந்த குழந்தையின் புகழ் மேலும் அதிகரித்துள்ளது.வாரந்தோறும் சூப்பர் மார்க்கெட்டிற்கு குழந்தையை தூக்கிச் செல்லும் போது, அத்தனை தலைகளும் குழந்தையை நோக்கி திரும்பி விடுகிறதாம். 40 நிமிடம் தான் சூப்பர் மார்க்கெட்டிற்கு போய்வர  செலவாகுமாம்.ஆனால் இந்த குழந்தையை தூக்கிச் செல்வதால் அனைவரும் தன்னை நிறுத்தி குழந்தைக்கு ஒரு ஹலோ சொல்லி விட்டுச் செல்கின்றனராம்.  இதனால் போய்வர 2 மணி நேரம் செலவாகிறதாம்*

++++++++++++++++
♈🇮🇳🌴9] *உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு *
++++++++++++++++
♈🇮🇳🌴10] *♈🇮🇳🌴 *பாஸ்போர்ட் கிடைக்கவிடாமல் திருப்பியனுப்பிய உளவுத்துறை காவலர்*

திருவெற்றியூரில் ஒருவர் பாஸ்போர்ட் பெற விண்ணபித்திருந்தார் . திருவெற்றியூர் பெரிய தொகுதி என்பதால் , வடசென்னை ஆர்கேநகர் H- 4 காவல்நிலைய உளவுத்துறை காவல் அதிகாரிக்கு பாஸ்போர்ட் விசாரணைக்கு  கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் மாதவன். அந்த காவல் அதிகாரி நடைமுறை விசாரணைக்காக அந்த விலாசத்தில் உள்ளவரை விசாரிக்க திருவெற்றியூர் செல்கிறார். பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்த அந்த இளைஞரை எடுத்த எடுப்பிலேயே ஒருமையில் குற்றவாளியை விசாரிப்பதை, அழைப்பதை போல் இவரை அணுகியுள்ளார். அந்த இளைஞரும் அந்த அதிகாரியிடம் , என்ன சார் இப்படி ஒருமையில் , பொறுக்கிகளை அழைப்பதை போல கூப்பிடுகிறீர்களே . நான் பாஸ்போர்ட் தானே விண்ணப்பித்திருந்தேன். தவறு ஏதும் செய்யவில்லையே . என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான். அந்த இளைஞரை மேலும் ஒருமையில் பேசி திட்டியுள்ளார். ஆரம்பத்திலிருந்து இதை கவனித்து வந்த பொதுமக்களும் காவலரை பிடிபிடியென்று பிடித்துக்கொண்டனர். அவமானம் தலைக்கேற அந்த இளைஞரை எப்படி பழிவாங்கினார் தெரியுமா. பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது கொடுத்த விலாசத்திலிருந்து சிலநாட்களுக்கு முன்புதான் மிக அருகிலேயே ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார் அந்த இளைஞர் . பொதுமக்களால் அவமானப்பட்டதாக கருதிய உளவுத்துறை காவலர் மாதவன் கீழ்தரமான , பழிவாங்கும் நோக்கோடு ஏதோ குளறுபடி செய்து பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரிக்கும்படி செய்துவிட்டார். பொதுமக்கள் முன்னிலையில் சவால்விட்டு சென்றதை நிறைவேற்றி கொருரமான சவாலை நிறைவேற்றி அந்த இளைஞரின் வாழ்வில் காவல்துறை மாண்பை சீர்க்குலைத்துவிட்டார். மிண்டும் விண்ணப்பிக்கலாம். கால விரையம்.மனஉளைச்சல் . அந்த உளவுத்துறை காவலர் மாதவன் மீது இதற்கு முன்னர் மாமூல் புகார் சென்றதன் விளைவாக அவரை சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்திற்கு மாற்றி உள்ளனர்.எப்படியோ மிண்டும் மாற்றல் உத்தரவு பெற்று மீண்டும் உளவுத்துறைக்கு வந்து பழைய நிலையை தடையின்றி செய்துவருவதாகவும் புகார் கூறப்படுகிறது . இவருடைய மனைவியும் காவலர்தானாம் ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய போது அங்கு வரும் நோயாளிகள் , உறவினர்களிடம் நாசுக்காக பேசி மாத சீட்டில் சேர்த்து கொள்வாராம். தண்டல், கந்து வட்டி தொழிலும் சைடு வருமானமாம் என்று கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
++++++++++++++++
♈🇮🇳🌴11] *கிருஷ்ணகிரி கெம்பக்கரை காட்டில் வேட்டையாடச் சென்ற போது உயிரிழந்த நண்பரின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காட்டுக்கு வேட்டையாடச் சென்ற போது 5 பேரில் ஒருவர் துப்பாக்கி வெடித்து உயிரிழந்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *ஆப்கான் தலைநகர் காபூலில் பயங்கர சத்தத்துடன் குண்டுவடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *உதய்ப்பூர் சென்ற ஏர் இந்தியா விஐபி விமானம் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில்     சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *நெல்லை அருகே மேலஇலந்தை குளத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். செங்கோட்டை அரசு மருத்துவமையானையில் செவிலியராக உள்ள காதலியை பார்க்க வந்தவரை வெட்டிக் கொலை செய்தனர்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *ஓசூர் அருகே கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிணற்று நீரில் மூழ்கி அக்கா பத்மா, சகோதரர் வெங்கடேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் அறிவித்துள்ளார்*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் தொடக்கப்பள்ளி சத்துணவு சமையற்கூடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வகுப்பறைக்கு தீ பரவியதால் மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். மேலும் வகுப்பறையில் பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *சென்னை: ஆவடியில் திருமண சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய பத்திர பதிவு அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தினேஷ்குமார் என்பவரிடம் திருமண சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சமாக வாங்கிய போது தனபால் கைது செய்யப்பட்டார்*
+++++++++++++++++++
♈🇮🇳🌴19] *மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக சுசில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவரான ராணி சிங் நாயரின் பதவிக் காலம் அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்*
++++++++++++
♈🇮🇳🌴20] *மதுரையில் சரவணன் என்பவரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மதுரையில் சரவணன் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் சதீஸ், செல்வகுமார் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது*
++++++++++++
♈🇮🇳🌴21] *கர்நாடக காவிரி பாசன பகுதிகளில் உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு அக்டோபர் 7ம் தேதி ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வள ஆணையத்தை சேர்ந்த மசூத் குசைன் ஆய்வில் பங்கேற்பார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து காவிரி பாசன பகுதிகளில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது*
+++++++++++++++
♈🇮🇳🌴22] *வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிந்து  28,220 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 8,743 புள்ளிகளாக உள்ளது*
++++++++++++++
http://www.sivakaaiteacherkaruppasamy.blogspot.com,
++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here