👫 இன்று ஓய்வூதியர்கள் தினம்
இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது.
👫 1982-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம், அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூறும் வகையில் இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🏆 அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி 1908ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கொலராடோவிலுள்ள கிராண்ட் பள்ளத்தாக்கு என்னுமிடத்தில் பிறந்தார்.
🏆 தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையின் வளர்ச்சியில் இவர் அளித்த பங்களிப்பு காரணமாக இவர் புகழ் பெற்றார்.
🏆 இவர் 1960ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இவர் தன்னுடைய 71வது வயதில் (1980) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🌍 1961ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கோவாவை இந்தியா, போர்ச்சுகலிடம் இருந்து கைப்பற்றியது.
✈ 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்கள் முதன்முதலில் 12 வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் என்ற ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர்.
✦ 1989ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி 25 ஆண்டுகளுக்கு பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
👉 1834ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
🌍பெரம்பலூர், அரியலூரில் அம்மா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றம்
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அம்மா பேரவையின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📡வேலை தேடி டெல்லி சென்ற இளம்பெண் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்.. ஒருவர் கைது
டெல்லி: தெற்கு டெல்லியின் மோதி பாக் பகுதியில் வியாழக்கிழமை இரவு இளம் பெண் ஒருவர் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
🌍சூரியஒளி மின்தகடு மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை
சூரியஒளி மின்தகடு (சோலார் பேனல்) மோசடி வழக்கில், சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது
📡எம்.பி.க்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி அறிவுறுத்தியுள்ளார்.
🌍586 இடங்களில் வருமான வரித் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.2,900 கோடி பறிமுதல்
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து 586 இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2,900 கோடி தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
📡செல்லிடப்பேசி கோபுரத்துக்கு சொத்து வரி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
செல்லிடப்பேசி கோபுரத்துக்கு சொத்து வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
🌍அதிமுக-பாஜக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை
தமிழகத்தில் ஆளும் அதிகமுவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சாரல்குன்னு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
📡ஏர்செல் சொத்துகளை முடக்க கோரும் மனு: சிபிஐ, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்
ஏர்செல் நிறுவன சொத்துகளை முடக்கக் கோரும் மனுவுக்கு சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
🌍பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
📡தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
புதுச்சேரி: தனியார் பள்ளி அருகே தவறவிட்ட 10 ஆயிரம் ரூபாய் மணிபர்சை கண்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை சிவா, எம்.எல்.ஏ., பாராட்டினார்.உருளையன்பேட்டை குபேர் நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் நேற்று காலை காந்தி வீதியில் மணிப்பர்சை தவறவிட்டுள்ளார். அதில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்தது. இது குறித்து நந்தகுமார் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மிஷன் வீதி சம்பா கோவில் ஆட்டோ ஸ்டேண்டில், ஆட்டோ ஓட்டும் தொ.மு.ச.,வை சேர்ந்த ராஜா (எ) அந்தோணிசாமி காந்தி வீதியில் மணிப்பர்சை கண்டெடுத்து தொகுதி எம்.எல்.ஏ., சிவா வசம் ஒப்படைத்தார். மணிப்பர்சை தொலைத்த நந்தகுமாரை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் முன்னிலையில் சிவா எம்.எல்.ஏ., மணிப்பர்சை ஒப்படைத்தார்.
🌍ரோட்டரி எலைட் சார்பில் குடிநீர் டிரம்கள் வழங்கல்
புதுச்சேரி: கொம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்காக, ரோட்டரி எலைட் சார்பில் குடிநீர் டிரம்கள் வழங்கப்பட்டது.கொம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் தேசிங்கு தலைமை தாங்கினார். ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். ரோட்டரி எலைட் சங்க தலைவர் ராமசாமி, மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க வசதியாக குடிநீர் டிரம்களை வழங்கினார். ரோட்டரி எலைட் நிர்வாகிகள் ஏகநாதன், புகழேந்தி, அருள், ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் அர்ச்சுனன், வனிதா, மணி, வெங்கடபிரியா, மதுமதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆசிரியர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
🌍மயங்கி விழுந்தவர் மரணம்
திருக்கனுார்: உடல் நிலை பாதிக்கப்பட்டவர் திருக்கனுார் பஜார் வீதியில் மயங்கி விழுந்து இறந்தார்.திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி, 51. உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இரவு திருக்கனுார் பஜார் வீதிக்கு வந்தார்.அப்போது சாலையில் நாராயணசாமி திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை திருக்கனுார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், நாராயணசாமி வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்து திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
📡புத்தாண்டையொட்டி விற்பனைக்கு வரும் 'சின்னம்மா காலண்டர்' குவியும் ஆர்டர்கள் !
கோவை: புத்தாண்டை முன்னிட்டுசசிகலாவின் படம் அச்சிடப்பட்ட பாக்கெட் கார்டுகள், காலண்டர்களுக்கு கோவை கடைகளில் ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளன.
🌍மற்ற நகரங்களைப் போல சென்னைக்குப் போர் ஆபத்து இல்லை: கடற்படை அதிகாரி
விழாவில் வீரர்களின் அணிவகுப்பை ஏற்ற கடற்படை அதிகாரி சுரேந்திர அஹுஜா.
இந்தியாவின் மற்ற நகரங்களைப் போல சென்னைக்குப் போர் ஆபத்து இல்லை என இந்திய பாதுகாப்புத் துறையின் கடற்படை, கப்பல் கட்டுமானப் பிரிவு உதவி கட்டுப்பாட்டாளர் ரியர் அட்மிரல் சுரேந்திர அஹூஜா தெரிவித்தார்.
📡புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை
புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை செய்து வருகிறது.
🌍உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்.. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து !
துபாய்: ரியோ ஒலிம்பிக்கில் தோற்கடித்த கரோலினா மரினை உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து.
📡புதுச்சேரியில் புத்தக கண்காட்சி முதல்வர் துவக்கி வைத்தார்
புதுச்சேரி: புதுச்சேரியில், கூட்டுறவு புத்தக சங்கம் சார்பில், 20வது தேசிய புத்தக கண்காட்சியை, முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார்.
🌍பரமாத்மாவை அடைவதற்கான வழி திருப்பாவையில் பொதிந்துள்ளது, முன்னாள் நீதிபதி ராமபத்திரன் உயன்யாசம்
புதுச்சேரி: 'பரமாத்மவை ஜீவாத்மா அடைய விடாமல் தடுப்பது எது? அடைவதற்கான வழி, அதன் பலன் என்ன என்ற அர்த்தம் திருப்பாவையில் பொதிந்துள்ளது' என, முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசினார்.
📡கவர்னர், அமைச்சருக்கான அதிகாரம், முதல்வர் நாராயணசாமி விளக்கம்
புதுச்சேரி: 'கவர்னர், அமைச்சர்கள் என, யாராக இருந்தாலும் அவர்களுக்குண்டான அதிகாரத்தின்படி செயல்பட்டால், கருத்து வேறுபாட்டிற்கு வாய்ப்பு இருக்காது' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்
🌍நாடாளுமன்றத்தை வழிநடத்த அரசு தவறிவிட்டது: பிரணாபிடம் எதிர்க்கட்சிகள் புகார்
""நாடாளுமன்றத்தை வழிநடத்த மத்திய அரசு தவறிவிட்டது'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முறையிட்டனர்.
📡ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட்: பான் எண் இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கம்
வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
🌍ரூபாய் நோட்டு வாபஸ்: அரசியல் சாசன அமர்வுக்கு வழக்குகள் மாற்றம்
அதிக மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
🌍தமிழ்நாட்டைப்
போலவே ராஜஸ்தானிலும் அம்மா உணவு திட்டம்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, நேற்று முன் தினம்(15-12-2016)அம்மாநிலத்தில், அண்ணபூர்ணா ரசோய் திட்டத்தை துவக்கிவைத்தார். இதனமூலம், காலை சிற்றுண்டி ரூ.5க்கும் மதியம் மற்றும் இரவு உணவுகள் ரூ.8 க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது
📡ரயில் நிலையங்களில் ஸ்வைப்பிங் மெஷின்கள் அதிகரிப்பு!
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு அதிகரித்தது. அதைச் சமாளிக்கும் வகையில், பெட்ரோல் பங்குகளில் மின்னணு பரிமாற்றம் செய்தால் 0.75% தள்ளுபடி என்று மத்திய அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களில் மின்னணு முறையில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 5 சதவிகிதமும் புறநகர் ரயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 சதவிகிதமும் தள்ளுபடி. டிஜிட்டல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் காப்பீடு. எல்.ஐ.சி காப்பீடுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 8 சதவிகிதம் தள்ளுபடி.
சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி உள்ளிட்ட பல அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
அதன் அடுத்த கட்டமாக, ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை அதிகரிக்கும் விதமாக ஸ்வைப்பிங் மிஷின்களின் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்துகிறது. அதற்காக, மின்னணு பரிமாற்றத்துக்கு பயன்படும் ஸ்வைப்பிங் இயந்திரம் தயாரிப்பதற்கான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
தற்போது, ரயில்வே முன்பதிவு மையங்களில் ஸ்வைப்பிங் மிஷின்களின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது.
🌍ராகுல் மனநிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை: மனோகர் பாரிக்கர்
பானஜி:ராகுல் மனநிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
📡ஜம்மு-காஷ்மீரில் கடும்பனிபொழிவால் பொதுமக்கள் அவதி
ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அதிமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வெளியில் தீ கொளுத்தி குளிர் காய்கின்றனர்.
🌍மும்பை அருகே பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்தது
மும்பை: மும்பை மாதுங்கா இசட் பாலம் அருகே பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த டெம்போ வேன் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
📡கட்சி உறுப்பினரே இல்லாத சசிகலா புஷ்பா எப்படி சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரலாம்?
அதிமுக வாதம்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எப்படி அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜனை தேர்ந்தெடுக்கக் கூடாது என வழக்கு தொடர முடியும்? என அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜனை நியமனம் செய்ய தடை கோரி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்காமல் மூத்த நிர்வாகிகள் மட்டும் சசிகலா நடராஜனை பொதுச்செயலராக்க முடிவை எடுத்துள்ளதாகவும் இது கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானது; ஆகையால் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இம்மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம் நேற்று விசாரித்தார். அப்போது சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி வாதிட்டார்.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கு இந்த வழக்கைத் தொடர உரிமை இல்லை. ஆகையால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம் எந்தவிதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் அதிமுக, சசிகலா நடராஜன் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
🌍கொல்கத்தா அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு: 12 குடிசைகள் சேதம்
கொல்கத்தா: கொல்கத்தா படிப்புகுர் பகுதியில் அதிகாலை சிலிண்டர் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 12 வீடுகளின் குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
http://www.sivakasiteacherkaruppasamy. blogspot.com
📡ஜனவரி-26 ல் ரிபப்ளிக் புதிய டிவி சேனல் துவக்கம்
புதுடில்லி: 2017-ஜனவரி 26(குடியரசு தினத்தன்று) ரிபப்ளிக் என்ற புதிய டிவி சேனல் ஒன்றை துவக்குகிறார் டைம்ஸ் நவ் டிவி சேனலின் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த அர்னாப் கோஸ்வாமி இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டார்.கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று டைம்ஸ் நவ் டி.வி சேனல் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அர்னாப் கோஸ்வாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து 2017 குடியரசு தினத்தன்று ரிபப்ளிக் என்ற புதிய டி.வி சேனலை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
🌍300 கி.மீ. தொலைவுக்கு மேல் சென்று தாக்கும் பிரம்மோஸ்: இந்தியா - ரஷியா ஒப்புதல்
புது தில்லி: பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை 300 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்த இந்தியாவும், ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
📡ராணுவம், விமானப் படைக்கு விரைவில் புதிய தலைமைத் தளபதிகள்: பாரிக்கர்
புது தில்லி: ராணுவம் மற்றும் விமானப் படைகளுக்கு விரைவில் புதிய தலைமைத் தளபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
🌍ஜெய்ப்பூர் அருகே தொழிற்சாலை கிட்டங்கியில் தீவிபத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விஸ்வகர்மா தொழிற்சாலை பகுதியில் அதிகாலையில் ஒரு கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. 12 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
🌍ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
📡ஜெயலலிதா மறைவால் விஐபி அந்தஸ்தை இழந்த ஆர்.கே. நகர் தொகுதி... இடைத்தேர்தல் எப்போது
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும் என்பதால் மே மாத விடுமுறையில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
🌍அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📡தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணமில்லை : ரத்தன் டாடா
புதுடில்லி : டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் எதுவுமில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்
🌍பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை
பெங்களூரு : பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசுகையில், பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவசரமான நேரங்களில் இது பாதிப்பை உண்டாக்குகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்காக 3 ஹெலிகாப்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
📡அதிக பணம் டெபாசிட் செய்த 3000 பேருக்கு நோட்டீஸ்
புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிறகு வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்திருக்கிறார்.
🌍4 ஆப்ஸ்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி : உளவுத்துறை அறிக்கையை தொடர்ந்து இந்தியர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்கும் குறிப்பிட்ட, நான்கு ஆப்ஸ்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் வைரஸ் நிறைந்த ஆப்ஸ்களை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனாளிகளின வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட ஆப்ஸ்களை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற ஆப்ஸ்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் SmeshApp எனும் ஆப்ஸ்.,ஐ உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் இது போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
📡சேகர் ரெட்டிக்கு ரூ92 கோடி ரூ2,000 நோட்டுகள் கிடைத்தது எப்படி? ரிசர்வ் வங்கியில் சிபிஐ விசாரணை
சென்னை: போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ92 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து சென்னை ரிசர்வ் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.
🌍போலி பத்திரம் மூலம் ஆக்கிரமிப்பு முயற்சி, இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி பத்திரம் தயாரித்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்
மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
📡மக்களவையில் 96, மாநிலங்களவையில் 86 மணி நேரம் வீண்! இரு அவைகளிலும் 4 மசோதாக்கள் மட்டும் நிறைவேற்றம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆளும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி, கூச்சல் குழப்பத்தால் மக்களவையில் 96 மணி நேரமும் மாநிலங்களவையில் 86 மணி நேரமும் வீணாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக