ஆசிரியர் யார்? ஆசிரியர் பணி என்பது என்ன?
அன்பை தருவது தாய் , அறிவை தருவது தந்தை என்றால் இந்த இரண்டையும் ஒருசேரத்தரும் தாயுமானவர்.. ஆசிரியர், ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்
ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன
6 மணிநேர கால்கடுக்கும் வேலையாள் - வெரிகோஸ் வியாதிவந்தவர்கள்.
சாக் பீஸ் துகள்களால் – ஆஸ்துமாவந்தவர்கள்
வேண்டாம் என்றாலும் ,தேர்தல் ஆணையத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு , அரசியல்வாதிகளால் துன்பம் அனுபிவித்தவர்கள்,
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கோடை காலத்தை பிள்ளைகளுடன் அனுபவிக்கமுடியாமல் ,முழுஆண்டு தேர்வு ,10 -ம் /12 -ம் வகுப்பு தாள் திருத்தும் ஆசிரியர்கள், இன்னும் பல படும் துன்பம் பற்றி ,
எத்தனை சவால்களை, சிரமங்களை, ஏமாற்றங்களை எதிர்ப்பட்டாலும், போதியளவு மரியாதை கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்தும் இவை அனைத்தின் மத்தியிலும் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆசிரியர் பணியை விட்டு விடாமல் அதில் நிலைத்திருக்கிறார்கள்.
நம்மை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஏணி, ஆசிரியர் மட்டுமே!
ஆசிரியர்கள் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டிய ஏணிகள்
உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா?
ஒரு மாணவராக அல்லது பெற்றோராக, ஆசிரியர் செலவிட்ட நேரம், முயற்சி, அக்கறை ஆகியவற்றுக்காக அவருக்கு எப்பொழுதாவது நன்றி தெரிவித்திருக்கிறீர்களா? அல்லது நன்றி மடலோ, நன்றி கடிதமோ அனுப்பியிருக்கிறீர்களா?
லட்சங்கள் தனியார் பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு கொடுத்து, லட்சியம் இல்லாமல் தனியாருக்கு மாடாய் உழைக்கும்,அதே லட்சங்களை லஞ்சம் மூலம் பெரும் நாம் , பெற்ற அறிவை ஏருக்கேனும் ஒருநாள் ஆசிரியராய் இருந்து புகட்டி இருக்கின்றோமா?
வெட்டியாக வாட்சப்பில் வந்த தகவலை வைத்து ஆசிரியர் பற்றியோ , அரசு ஆசிரியர் பற்றி விமரிசித்து பேச ஏ சி அறையில் வாழும் நமக்கு என்ன தகுதி இருக்கின்றது??????
ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை…..
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
யோசியுங்கள்
நமக்கு இருக்கின்றதா இந்த தகுதியும் , தன்மையும் ...???????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக