தமிழ் இணைய செய்திகள்
05/04/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.4,000 வீதம் பணப்பட்டுவாடா முடிந்து விட்டது...*
*தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தோல்வி : OPS அணி புகார்...*
*🔵🔵காவலர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் : திண்டுக்கல் எஸ்பி அறிவிப்பு*
*திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எஸ்.பி. சரவணன் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது காவலர்கள் அவசியம் தலைகவசம் அணிய வேண்டும் என எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டுள்ளார்.*
*புதுச்சேரி நகராட்சி முன்னாள் ஆணையர் சந்திரசேகர் விவகாரத்தில், தலைமை செயலர் முறையாக செயல் படவில்லை - துணை நிலை ஆளுநர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*விதிமுறைகளை மீறி செயல்பட்ட தலைமை செயலர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளேன் - கிரண்பேடி.*
*ஊழியர்களின் பொது வைப்பு நிதியிலிருந்து ரூ36 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக வந்த புகார் குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன்- கிரண்பேடி*
*மதுரை: உசிலம்பட்டி அருகே கிணறுவெட்டும்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு*
*சீனாவிற்கு எதிராக இந்தியா என்னை ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது - தலாய் லாமா*
*இடைத்தேர்தல் அன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், 99405 99465 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அளிக்கலாம்*
*பணப்பட்டுவாடாவுக்கு துணை போவதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தாமரை கண்ணன் & ஜெயக்குமார் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் #திமுக புகார்.*
*செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ற காரை மடக்கிய சுங்கச்சாவடி ஊழியருக்கு கத்தி குத்து- கார் ஓட்டுநர் உட்பட இருவர் கைது.*
*தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்.*
_தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், ஈரோட்டியில்-106 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொழுத்தியது. வேலூரில்-104, திருப்பத்தூர், சேலம் மதுரை நெல்லையில்-103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியது._
*நாகர்கோவிலில் 50 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.*
_நாகர்கோவிலில் 50 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரீபட்டன் நிறுவனத்திற்கு ரூ.2.40 கோடி நிலுவையை செலுத்தாததால் நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._
*இதுவரை 10 அரசு பேருந்துகள் ஜப்தி- பயணிகள் அவதி.*
*சென்னையில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.*
*எம்.கே.பி.நகர் உதவி ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*திருவொற்றியூர் உதவி ஆணையராக ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்.*
*வடசென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ஜெயராம் மாற்றம்.*
*தினகரன் - விவேக் மோதலா?*
இளவரசியின் மகன் விவேக்கிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் அதிமுகவில் கட்சி பதவி குறித்தும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாகவும் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக ஜெயா ப்ளஸ் சேனலில் தினகரன் குறித்தான செய்திகள் அடக்கி வாசிக்கபடுவதாகவும், நேரலையில் பிரச்சாரம் ஒளிபரப்பட்டு வந்ததை விவேக் தலையிட்டு நிறுத்தியுள்ளதாகவும் வரும் செய்திகளை அதிமுக தரப்பும், தொலைகாட்சி தரப்பிலும் மறுக்கபடவில்லை என்பதும் கவனிக்கதக்கது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔵 *10வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடக்கம்*
*டாசில் வென்ற பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு*
*ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக