•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
07/04/2017
(வெள்ளி)
*_✴ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 2 வீரர்கள் உயிரிழப்பு_*
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதாலிக் துறையில் ஏற்பட்ட பனிச் சரிவுகளில் சிக்கி படுகாயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கிய ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
*_✴சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை_*தமிழ் இணைய செய்திகள்
சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
*_✴ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் தீ விபத்து_*
ராஜஸ்தான்: ஆழ்வாரில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தின் இடைப்பகுதி மண்டலத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தீ இன்னும் ஆக்ரோஷமாக தொடர்ந்து எரிந்துகொண்டு வருகிறது.
*_✴புதுடெல்லியில் நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 2 பேர் படுகாயம்_*
புதுடெல்லி: டெல்லியின் சுரேஷ்தா விஹார் பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது.
*_✴ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 2 வீரர்கள் படுகாயம்_*தமிழ் இணைய செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதாலிக் துறையில் ஏற்பட்ட பனிச் சரிவுகளில் சிக்கிய 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
*_✴60 ஏவுகணைகளை பயன்படுத்தி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்_*
சிரியா: சிரியா இரசாயன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தொமஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மொத்தம் 60 ஏவுகணைகளை பயன்படுத்தி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
*_✴போபாலில் உள்ள கழிவு கிடங்கியில் தீ விபத்து: 10 வீடுகளில் தீயில் எரிந்து நாசம்_*
போபால்: போபாலில் உள்ள ஒரு கழிவு கிடங்கியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கிடங்கிற்கு அருகே உள்ள 10 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாயின. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தமிழ் இணைய செய்திகள்
*_✴டிராய் உத்தரவை தொடர்ந்து சம்மர் சலுகை பற்றி ஜியோ புது அறிவிப்பு_*
மும்பை: டிராய் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஜியோ சம்மர் சலுகை ரத்து செய்யப்படுவதாக ஜியோ அறிவித்துள்ளது. அதிவேக ஜியோ 4ஜி வசதியை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, வாடிக்கையாளர்களுக்கு தனது பிரைம் சேவைகள் உட்பட அனைத்தையும் இலவசமாக அளித்தார். கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இலவச சேவை முடிவடைந்தது. அதேநேரத்தில், மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு, மாதம் ரூ.303 கட்டணத்தில் டேட்டா, இலவச அழைப்பு வசதி மட்டுமின்றி அனைத்து பிரைம் சேவைகளையும் பெறலாம் என அறிவித்தார்.
பிரைம் வாடிக்கையாளராகும் கெடு பின்னர் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதோடு, பிரைம் வாடிக்கையாளராக சேர்ந்தவர்களுக்கு, காம்ப்ளிமென்டரி அடிப்படையில் மேலும் 3 மாதம் இலவச சேவையை நீட்டித்தது. இதனால் ஜூலையில் இருந்துதான் கட்டண டேரிப் நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த 3 மாத காம்ப்ளிமென்டரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்ற டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முடிவை ஜியோ ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் காம்ப்ளிமென்டரி சலுகைகள் ரத்து செய்யப்படும். கூடிய விரைவில் அடுத்த சில நாட்களில் இது செயல்படுத்தப்படும். அதேநேரத்தில், இந்த ரத்துக்கு முன்பு திட்டத்தில் சேர்ந்தவர்கள் பலன்பெற தகுதியுடையவர்கள் என ஜியோ தெரிவித்துள்ளது.
*_✴விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை_*
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை, இலுப்பூர் வீடு உள்ளிட்ட 30 இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
*🔶🔶விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல்குவாரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை*
*🔵🔵மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினகரன் அணியினர் 9 பேரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி & அமைச்சர்கள் ஆறுதல்*
*🔹🔹வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்.*
*🔶🔶60 ஏவுகணைகளை பயன்படுத்தி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்*தமிழ் இணைய செய்திகள்
சிரியா இரசாயன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தொமஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மொத்தம் 60 ஏவுகணைகளை பயன்படுத்தி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை_*
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்எல்ஏ விடுதியில் உள்ள 5 அறைகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
*_✴அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்.ஜி,ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீட்டிலும் சோதனை_*தமிழ் இணைய செய்திகள்
சென்னை : அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.ஜி,ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
*_✴ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா அணியினருக்கு இடையே கடும் மோதல்_*தமிழ் இணைய செய்திகள்
சென்னை: நேற்று இரவு சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிமுக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக சசிகலா அணியினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலின்போது அதிமுக ஓ.பன்னீர்செல்வத்தின் காரும் சேதமாகியுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா?*
*பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின : வருமான வரித்துறை தகவல்.*
_சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததற்காதன ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை ஆதாரமாக வைத்து வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது உறுதி செய்யப்படும், இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது._
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🍎500, 1000 நோட்டுகளை தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
🍏 செல்லாத 100 நோட்டுகள்
🌻உயர்மதிப்பு கரன்சிகளாக இருந்த ரூ.500, 1000 நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. இதனால் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தவித்தனர்.
🌻 இந்நிலையில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை அரசு அச்சிட்டு வெளியிட்டது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவடைந்ததும் கரன்சி தட்டுப்பாடு நீங்கி இயல்பு நிலை திரும்பியது.
என்றாலும் கரன்சி தடையால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் முழுமையாக தீரவில்லை.
🌻 இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதியதாக வெளியிட்ட ரூ.10 நாணயம் போலியானது என்ற தகவல் பரவியது. இதையடுத்து வர்த்தக நிறுவனங்கள் இந்த நாணயத்தை வாங்க மறுத்தன.
🌻 அதோடு அரசு நிறுவனங்கள், பஸ்களிலும் புதிய நாணயம் மறுக்கப்பட்டது. சில வங்கிகள், கூட்டுறவு சங்கங்களும் புதிய ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
🌻இதையடுத்து ரிசர்வ் வங்கி, புதிய 10 ரூபாய் நாணயம் அனைத்தும் உண்மையானதுதான். அந்த நாணயத்தை போலியாக உருவாக்க முடியாது. எனவே அனைவரும் ரூ.10 நாயணத்தை பயன்படுத்த வேண்டும்.
🌻அரசு துறைகள், வங்கிகளில் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது. இதையடுத்து இந்த பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. என்றாலும் கடைகள், தனியார் நிறுவனங்களில் ரூ.10 நாணயம் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌻இந்நிலையில் இந்த வரிசையில் ரூ.100 நோட்டும் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி 2015ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற்றது. ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு அந்த நோட்டில் இருந்தால் தான் செல்லும், பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
🌻 இதன்படி பலர் தங்களிடம் இருந்த பழைய ரூ.100 நோட்டுகளை வங்கியில் திரும்ப ஒப்படைத்தனர்.
ஆனால் இதுபற்றி உரிய விழிப்புணர்வு இல்லாதவர்களும், இப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்ட தகவலை தெரியாதவர்களும் இந்த நோட்டுகளை இதுவரை மாற்றவில்லை.
🌻 ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுக்கும், பழைய நோட்டுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. 2015க்கு பின் அச்சிடப்பட்ட ரூ.100 நோட்டில் அந்த நோட்டின் பின்பக்கம் கீழ்பகுதியில் சிறிய அளவில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். பழைய நோட்டுகளில் ஆண்டு இருக்காது. இதை கவனமாக பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும். தமிழ் இணைய செய்திகள்
🌻இதனால் பெரும்பாலானவர்கள் இதை ஒரு முக்கியமானதாக கருதவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் கெடுபிடி காரணமாக தற்போது ஆண்டு அச்சிடப்படாத பழைய 100 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வாங்க மறுக்கின்றனர்.
🌻 இதனால் பொதுமக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது.
🌻 நேற்று முன்தினம் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஒருவர் கொண்டு வந்த ரூ.100 நோட்டு கட்டுகளில் ஆண்டு அச்சிடப்படாத சில நோட்டுகள் இருந்தன. அந்த நோட்டுகளை வங்கி ஊழியர் திருப்பி கொடுத்ததால் அவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
🌻ரூ.500, 1000 நோட்டுகள், அதன்பின் ரூ.10 நாயணத்தை தொடர்ந்து தற்போது ரூ.100 நோட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக