தமிழ் இணைய செய்திகள்
07/04/2017
🔴🔴🔴🔴🔴
*மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!*
*தினகரன் வெற்றி வாய்ப்பு உறுதியானதால் ஓபிஎஸ் தூண்டுதலால் மத்திய அரசு அத்துமீறல்!*
*தனியறையில் வைத்து விஜயபாஸ்கரை மிரட்டிவருகின்றனர்!*
*மாநில அமைச்சர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர் - தளவாய் சுந்தரம்!*
*அதிமுக தொண்டர்களின் வருகையால் பரபரப்பு! பதட்டம்!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔴அம்மா உணவகத்தில் பணப்பட்டுவாடா - அதிர்ச்சியில் அதிகாரிகள்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்ததேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறலாம் என்று தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே தகவல் வெளியானது.
நாளை (8–ந் தேதி) முதல் பணம் வினியோகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷன் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்து வருவதால் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பணபட்டுவாடா நடந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமும் மிகவும் விழிப்பாக கண்காணிப்பதால் வீடு தேடிச் சென்று பணபட்டுவாடா நடப்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சமூக நலக்கூடங்கள் போன்ற பொதுவான இடங்களில் வாக்காளர்களை வரவழைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கி அம்மா உணவகங்களில் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வினியோகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் எவ்வளவு கெடுபிடியை உருவாக்கினாலும், விதவிதமான முறையில் பணப்பட்டுவாடா நடப்பது அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com *🔴🔴🔴🔴அனைவரையும் சிக்க வைக்கும் ₹2000 நோட்டுகள்!*
எழும்பூரில் உள்ள விடுதியிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியது!
திட்டமிட்டு பொறியில் சிக்க வைத்தது தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசு! தமிழ் இணைய செய்திகள்
பணப்பட்டுவாடா நடந்த விபரங்கள், நபர்கள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் கமிஷன் திட்டமிட்டு வீடியோவில் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த மத்திய அரசு அதிகாரிகள் உறுதி!
கூவத்தூர் விடுதியில் நடந்த விபரங்கள் மத்திய அரசின் கையில் உள்ளதால் அதில் சம்பந்தபட்ட, ஆதாயம் அடைந்தவர்கள் மீதும் நடவடிக்கை பாய்கிறது.
தமிழருவி மணியன் அறிக்கை :
டாக்டர்.இராமதாசு, டாக்டர்.அன்புமணிக்கு நன்றி...
------------------------------------------------------
மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டு இலக்குகளையும் உயிர்க் கொள்கைகளாகக் கொண்டு காந்திய மக்கள் இயக்கம் இந்த மண்ணில் இயங்கி வருகிறது. மதுவினால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதை இந்த அரசுக்கு உணர்த்தவே மாநிலம் முழுவதும் 18 லட்சம் மாணவ மாணவியர் கையொப்பங்களை டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காகப் பெற்று அன்றைய கலால்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வசம் நேரில் வழங்கியும் பயனற்றுப்போனது.
இந்நிலையில் பூரண மதுவிலக்கை வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பூர்வமாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, இன்று மத்திய மாநில நெடுஞ்சாலைகளில் மது வெளிச்சத்தைப் பெருகச் செய்து இந்தியாவிலேயே மிக அதிகமான சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமாக விளங்கிய 3300 மதுக்கடைகளை மூடுவதற்கு வழி பிறந்தது. பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும் முயற்சிகளில் மருத்துவர் இராமதாசும் அன்புமணி இராமதாசும் உள்ளார்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை காந்திய மக்கள் இயக்கம் மனமுவந்து பாராட்டுகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பணிந்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நகர சாலைகளாகப் பெயர் மாற்றம் செய்து, சாராய வருவாய் சரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள தமிழக அரசு தவறான வழிகளில் ஈடுபடுமானால் அதற்குரிய விலையைத் தர வேண்டியிருக்கும். மக்கள் விரோத அரசாக, ஊழல் மலிந்த அரசாக, விவசாயிகளின் நலன் காக்கத் தவறிய அரசாக விளங்கும் இடைப்பாடி பழனிச்சாமியின் அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றும் சட்ட விரோத அரசாக மாறுமானால் இனியும் மக்கள் மௌனப் பார்வையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்று காந்திய மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுகிறது.
- தமிழருவி மணியன்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔴🔴🔴🔴வலை விரித்த தேர்தல் கமிஷன்! சிக்கிய தினகரன்!!*
அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன் வகையாக சிக்கி கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. நடப்பதெல்லவற்றையும் பார்த்தும் கண்டுகொள்ளாதது போல் இருந்த கமிஷன் அதிகாரிகள் முழு பலத்தையும் பயன்படுத்தி தங்கள் ஆளுமையை நிரூபிக்க முனைந்துள்ளனர்.
ஒரு பல்கலை வேந்தர், மருத்துவத்துறை உயர் அதிகாரி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, அதிமுக எம்பிக்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களை சுற்றி வளைத்துவிட்டது வருமான வரித்துறை!
தினகரன் மற்றும் அதிமுக அம்மா பிரிவை தேர்தல் தகுதி நீக்கம் செய்யவும் அதிகாரிகள் திட்டம்!
*🔴🔴🔴🔴🔴 அதிமுக எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் இல்லத்தில் சோதனை!*
*பொது சுகாதாரத்துறை அதிகாரி குழந்தைசாமி வீட்டிலும் சோதனை!*
*துணை வேந்தர் விஜயலட்சுமியின் இல்லத்திலும் சோதனை!*
*அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கட்டுகட்டாக பணம் சிக்கியதாக தகவல்! காரிலிரிந்து டோக்கன்களை கைப்பற்றிய அதிகாரிகளிடம் யார் யார் எவ்வளவு பணம் பெற்றனர் என்ற விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கியது!*
*₹2000 நோட்டுகள் மதுரையிலுள்ள ஒரு குவாரி அதிபர் வீட்டிலிருந்து வந்ததாக தகவல்!*
*தேர்தல் செலவாக தினகரன் அணி ₹120 கோடி செலவு செய்துள்ளதாக வந்த தகவலால் இந்திய அளவில் அதிர்ச்சி!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔴🔴🔴🔴*
*தேர்தல் ரத்தா? அல்லது தினகரன் தகுதி நீக்கமா?*
தங்களுக்கு தினகரன் ஆள்கள் ₹4000/- பணத்தை கொடுத்தனர் என ஆர்.கே.நகர் மக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான பெண்கள் சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளதால் முடிவெடுக்க நிர்பந்தத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது. நாளை மாலைக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய அறிவுப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என ஆணைய வட்டாரங்கள் தகவல்!
🔴🔴🔴🔴🔴
*சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்குள் அத்துமீறு நுழைவு!*
*சிஆர்பிஎப் வீரர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து உள்ளே நுழைந்ததால் பதட்டம்! பரபரப்பு!!*
🔴🔴🔴🔴🔴
*விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டிலிருந்து ₹2000/- நோட்டுகள் 2.2 கோடி கண்டுபிடிப்பு! பறிமுதல்!*
🔴🔴🔴🔴🔴
*சென்னையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லங்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் இல்லங்களில் தீவிர சோதனை!*
*ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.*
குறிப்பாக, ஜீலம் நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காணப்பட்ட ஜம்மு-காஷ்மீரில், 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பனி உருகத் தொடங்கியதால், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்டது போல், மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு நிகழலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.
கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும், பனி மலைப் பிரதேசங்களில் பனிச்சரிவும் ஏற்பட்டுள்ளது. Batalik sector பகுதியில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில், ராணுவ வீரர்கள் 3 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
*டெல்லியில் போராடும் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு.*
_டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 25 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்._
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔴திரைப்பட விருதுகள்*
*64ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிப்பு; இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்து வருகிறது.*
*சிறந்த தமிழ்பட விருது ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்திற்கு வழங்கப்படுகிறது*
*சிறந்த பாடலாசிரியராக வைரமுத்து தேர்வு*
ஆவணங்களை கொண்டே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை;வருமானவரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை: *தமிழிசை*
🔴🔵 *திரைப்பட விருதுகள்*
*சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு அறவிப்பு*
*தர்மதுரை படத்தில் எந்தப்பக்கம் என்ற பாடலை எழுதிய வைரமுத்துவுக்கு தேசிய விருது*
*சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது “24” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுக்கு அறிவிப்பு.*
*"ருஷ்டம்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அக்ஷ்ய் குமார்.*
*சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான தேசிய விருது பீட்டர் கெயினுக்கு அறிவிப்பு*
சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான தேசிய விருது பீட்டர் கெயினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புலி முருகன் படத்தில் பணியாற்றி பீட்டர் கெயின் சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக